ads
கபாலி, ஸ்கெட்ச் படங்களில் நடித்துள்ள விஸ்வந்த் கதாநாயகனாகிறார்
ராசு (Author) Published Date : Dec 24, 2017 09:50 ISTபொழுதுபோக்கு
சூப்பர் ஸ்டாருக்கு உதவி நண்பராக கபாலி படத்தில் நடித்த விஸ்வந்த் தற்போது 'ஓநாய்கள் ஜாக்கிரதை' என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார். இது குறித்து விஸ்வந்த் செய்தியாளர்களிடம் பேசியபோது "இயக்குனர் ரஞ்சித் 'அட்டகத்தி' படத்தின் மூலம் என்னை நடிகராக்கினார். திரையுலகில் நான் நடன கலைஞராவதற்கு வந்தேன். இதை அடுத்து இயக்குனர் ரஞ்சித், சூப்பர் ஸ்டாரின் கபாலி படத்தில் என்னை நடிக்க வைத்து பெரிய அங்கீகாரத்தை பெற்று தந்தார். ரஜினிகாந்த் என்னுடைய நடிப்பை பாராட்டினார். அடுத்ததாக நடிகர் விக்ரமின் ஸ்கெட்ச் படத்தில் விக்ரமுக்கு நண்பராக நடித்துள்ளேன். அவரை பார்த்து நடிப்பை பற்றி நிறைய கற்று கொண்டேன்.
இதனை அடுத்து தற்போது 'சண்டக்கோழி 2' படத்தில் நடித்து வருகிறேன். இந்த படத்தில் எனக்கு ஜோடியாக வரலட்சுமி சரத்குமார் நடிக்கிறார். இந்த படத்தில் மதுரை பையனாக நடித்துள்ளேன். தற்போது திகில் படமான 'ஓநாய்கள் ஜாக்கிரதை' படத்தில் கதாநாயகனாக நடிக்கிறேன். இந்த படத்தில் ரித்விகா எனக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்த படத்தை இயக்குனர் கேபிஆர் இயக்குகிறார். இதை தவிர்த்து புதுமுக இயக்குனர் பாலா இயக்கும் உளவியல் சார்ந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறேன். கதாநாயகனாக நடித்தாலும் ஹீரோவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.