ads
ஸ்கெட்ச் படத்தின் 'அடிச்சி புடிச்சி' சிங்கில் பாடல் வெளியீடு
ராதிகா (Author) Published Date : Dec 23, 2017 12:12 ISTபொழுதுபோக்கு
விஜய் சந்தர் எழுத்து இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் பொங்கலுக்கு வெளிவர உள்ள படம் 'ஸ்கெட்ச்'. இந்த படத்தில் நாயகியாக தமன்னா இணைத்துள்ளார். முதல் முதலாக இணையும் இந்த ஜோடியுடன் மெகாலி, ராதாரவி, வேல ராமமூர்த்தி, ஸ்ரீமன், ரவி கிஷான், ஆர்கே. சுரேஷ், ஹரீஸ் பேரடி உள்பட பலர் சேர்ந்து நடித்து வருகின்றனர். மேலும் முக்கிய வேடத்தில் ஸ்ரீ பிரியங்கா, சூரி நடித்துள்ளனர். இந்நிலையில் படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடெக்சன் பணியில் தற்பொழுது படக்குழு ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் படத்தில் சீயான் விக்ரம் பல வித கெட்டப்களை மேற்கொண்டதோடு டப்பிங்கில் புது வித குரலையும் கையாண்டுள்ளார். கடந்த நாட்களில் வெளிவந்த படத்தின் போஸ்டர், டீசர் போன்றவை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது. மேலும் டீசரில் வெளிவந்த 'ஸ்கெட்ச் டைலாக்ஸ், சண்டை காட்சிகள், விக்ரமின் ஸ்டெய்ல் போன்றவைகளின் வரவேற்புகள் ரசிகர்களிடம் அதிகரித்திருந்தது. இதன் காரணத்தினால் படத்தின் எதிர்பார்ப்பும் அதிகரித்திருந்தது.
இந்நிலையில் படத்தின் 'அடிச்சி புடிச்சி' ப்ரோமோ சிங்கில் பாடல் வருகிற 25ம் தேதி வெளியிட உள்ளனர். கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து அவரே வெளியிடயுள்ள இப்படத்தில் எஸ்.எஸ்.தமன் இசையமைத்துள்ளார். மேலும் இப்படத்தில் சுகுமார் ஒளிப்பதிவையும், ரூபன் எடிட்டிங் பணியையும் மேற்கொண்டுள்ளனர்.