ads
இசை புயலை கவுரவபடுத்த பாடகராக மாறிய சூப்பர் ஸ்டார்
விக்னேஷ் (Author) Published Date : Dec 20, 2017 12:15 ISTபொழுதுபோக்கு
இந்தியாவின் புகழ் பெற்ற திரைப்பட இசைமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மான் சென்னையை சேர்ந்தவர். இவர் தனது ஒன்பதாவது வயதில் தனது தந்தையை இழந்தார். சாரதா மற்றும் திரிலோக் ஆகியோருடன் இணைந்து விளம்பரங்களுக்கு இசையமைக்க ஆரம்பித்தார். பூஸ்ட், ஏர்டெல், ஏசியன் பெய்ண்ட்ஸ், லியோ காபி போன்ற நிறுவனங்களின் 300கும் மேற்பட்ட விளம்பரங்களுக்கு இசையமைத்துள்ளார். இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் 'ரோஜா' என்ற திரைப்படத்தில் இசையமைத்ததின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். இவர் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி போன்ற மொழிகளில் இசையமைத்துள்ளார். இவர் 2008-ஆம் ஆண்டு வெளியான 'ஸ்லம் டாக் மில்லியனர்' என்ற ஆங்கில திரைப்படத்திற்கு இசையமைத்ததிற்கு ஆஸ்கர் விருது, கோல்டன் குளோப் விருது, பாப்டா விருது போன்ற விருதுகளை வென்றுள்ளார்.
2010-ஆம் ஆண்டில் இவருக்கு இந்தியாவின் பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. மேலும் இசைப்புயலான இவர் ஆசியாவின் மொசார்ட் என்றும் அழைக்கப்படுகிறார். இவர் தற்போது திரையுலகிற்கு அடியெடுத்து வைத்து 25 ஆண்டுகள் ஆகியுள்ளது. இந்த நினைவை தனது இசை நிகழ்ச்சியில் கொண்டாட உள்ளார். இந்த நிகழ்ச்சி தலைநகரான டெல்லியில் நடைபெற உள்ளது. இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்டு இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் அவர்களை கவுரவிக்க அவரது இசையமைப்பில் ஒரு பாடலை பாடவுள்ளார். இந்த நிகழ்ச்சி வருகிற டிசம்பர் 23-ஆம் தேதி இந்திரா காந்தி விளையாட்டு அரங்கில் 'என்கோர் (Encore)' என்ற தலைப்பில் நடைபெற உள்ளது. இவர்களது கூட்டணியில் இயக்குனர் சங்கரின் '2.0' திரைப்படம் விரைவில் வெளிவரவுள்ளது.