ads

ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்த முன்னால் கிரிக்கெட் வீரர்

sachin suresh raina wishes rajinikanth birthday

sachin suresh raina wishes rajinikanth birthday

ரஜினிகாந்தின் பிறந்த நாளான இன்று ரசிகர்கள், திரை துறை பிரபலங்கள், பிரபல நிறுவங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு, பா.ரஞ்சித் இயக்கத்தில் அவர் நடித்து வந்த 'காலா' படத்தின் இரண்டாம் லுக் போஸ்டரை இன்று வெளியிட்டனர். 

இந்நிலையில் உலக புகழ் பெற்ற முன்னால் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ரஜினிக்கு அவரது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதில் 'பிறந்தநாள் வாழ்த்துக்கள் சூப்பர் ஸ்டார் ரஜினி ஜி. இந்த உலகத்தில் ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடமுன் நீங்கள் வாழ வேண்டும்' என்று கூறியுள்ளார்.     

மேலும் இந்திய அணியில் இருந்து சுரேஷ் ரெய்னா ட்விட்டரில், பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவா ! எங்களை நீங்கள் மேலும் மேலும் மகிழ்விக்க வேண்டும் என்று பதிவு செய்துள்ளார்.   

இந்நிலையில் ரசிகர்கள் ஒன்று திரண்டு ரஜினியின் வீட்டிற்கு சென்று கேக் வெட்டி அவருக்கு வாழ்த்து தெரிவிக்கலாம் என்று சென்ற போது ரஜினிகாந்த் வெளியூர் சென்றிருப்பதாக செய்திகள் வெளிவந்ததால் ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தனர். இதனை அடுத்து ரஜினியின் வீட்டு வாசலில் கேக் வெட்டி கொண்டாடி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.       

rajinikanth birthdayrajinikanth birthday

ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்த முன்னால் கிரிக்கெட் வீரர்