ads
சூப்பர் ஸ்டார் பிறந்த நாளில் 'காலா' சர்ப்ரைஸ்
மீனா ஸ்ரீ (Author) Published Date : Dec 12, 2017 09:39 ISTபொழுதுபோக்கு
பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளிவரவுள்ள படம் 'காலா'. இந்த படத்தில் ஹுமா குரேஷி, அஞ்சலி பாட்டில், சமுத்திர கனி, சுகன்யா, ஈஸ்வரி ராவ், சம்பத் ராஜ், ரவி காலே உள்பட பலர் நடித்துள்ளனர். வொண்டர்பார் நிறுவனத்தின் சார்பில் தனுஷ் தயாரித்து வரும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் முன்னதாகவே வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது.
இதற்கு அடுத்தபடியாக ரஜினிகாந்த் பிறந்தநாளான இன்று ரசிகர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் சென்னையில் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் அவரின் பிறந்த நாளை முன்னிட்டு 'காலா' படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். படத்தை தயாரித்து வரும் வொண்டர்பார் நிறுவனம் இந்த புது வித போஸ்டரை அவர்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இதன் காரணத்தினால் ரசிகர்கள் இரட்டிப்பு சந்தோசதோசத்தில் மகிழ்ச்சியடைந்து வருகின்றனர்.