ads
அடுத்தடுத்து வெளிவர உள்ள ரஜினியின் 2.0, காலா
மீனா ஸ்ரீ (Author) Published Date : Dec 03, 2017 03:09 ISTபொழுதுபோக்கு
சங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி சாக்சன் நடிப்பில் உருவாகியுள்ள 2.0 படத்தினை லைக்கா ப்ரொடெக்சன் அதிகளவு பட்ஜட்டில் பிரமாண்டமான முறையில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் போஸ்டர், இசை போன்றவை ரசிகர்கள் கவரும் வகையில் வெளியிட்டனர். படத்தின் எதிர்பார்புகள் நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து கொண்டே இருக்கும் இந்நிலையில் படத்தினை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 25ம் தேதி வெளியிடுவதாக தகவல்கள் முன்பு வந்திருந்தது. இதனை அடுத்து தற்பொழுது வந்த தகவலின் படி படத்தினை ஏப்ரல் 13ம் தேதி வெளியிடுவதாக அதிகார பூர்வ அறிவிப்பினை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ரஜினிகாந்தின் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள காலா படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் போஸ்ட் ப்ரொடெக்சன் பணியில் படக்குழு தீவிரமாக இறங்கியுள்ளது. இந்த படத்தினை ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று வெளியிட உள்ளனர். இந்நிலையில் ரஜினிகாந்த்தின் படங்கள் அடுத்தடுத்து வெளிவர இருப்பதால் ரசிகர்கள் ஆரவத்தோடு கொண்டாடி வருகின்றனர்.