ads

2.0 படத்துடன் மோதும் பாக்மதி

bhagmati and enthiran 2 movies release

bhagmati and enthiran 2 movies release

சங்கர் இயக்கத்தில் ரஜினி நடப்பில் வெளிவர உள்ள படம் '2.0'. இப்படத்தின் பஸ்ட் லுக், இசை போன்றவை வெளிவந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது. எமி ஜாக்சன் நாயகியாகவும் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் வில்லனாக நடித்துள்ள இப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான்  இசையமைத்திருக்கிறார். இந்த படத்தினை தயாரித்த லைக்கா நிறுவனம் அடுத்த வருடம் ஜனவரி மாதம் 25ம் தேதி படத்தினை வெளியிடுவதாக அறிவித்திருந்தது.

இந்நிலையில் அக்‌ஷய் குமார் நடிப்பில் வெளிவர இருக்கும் 'பத்மன்' ஹிந்தி படம் வருகிற ஜனவரி மாதம் 26ம் தேதி வெளிவருவதாக இருந்ததில் '2.0' படத்தின் வெளியீடு தேதி மாற்றப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா, படத்தின் வெளியீட்டு தேதியில் எவ்வித மாற்றமும் இருக்காது என அறிவித்தது.   

அதனை தொடர்ந்து அனுஷ்கா ஷெட்டி நடிப்பில் உருவாகி வரும்  ‘பாக்மதி' படத்தினை ஜனவரி மாதம் 26ம் தேதி வெளியிடவுள்ளனர். ஜி. அசோக் இயக்கும் இப்படத்தினை தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் வெளியிட உள்ளனர். யுவி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டுடியோ க்ரீன் இரண்டு நிறுவனம் சேர்ந்து தயாரிக்கும் இப்படத்தில் ஆதி பின்னிசெட்டி, ஜெயராம், உன்னி முகுந்தன், ஆஷா சரத் ஆகியோர் நடிகின்றனர். 

2.0 படத்தினை 25ம் தேதி வெளியிட இப்பதினால், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்துடன் அனுஷ்காவின் 'பாக்மதி' அதிரடி படம் மோதுவது உறுதியாகிவிட்டது.  

2.0 படத்துடன் மோதும் பாக்மதி