அனுஷ்கா பிறந்த நாளையொட்டி பாக்மதி படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

       பதிவு : Nov 06, 2017 13:20 IST    
அனுஷ்கா பிறந்த நாளையொட்டி பாக்மதி படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

அருந்ததி, ருத்ரம்மாதேவி, பாகுபலி என்று சரித்திர படங்களில் நடித்து வரும் நடிகை அனுஷ்கா தற்போது 'பாக்மதி' படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் சரித்திர படமாக இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் இந்த படம் வழக்கமான கமர்சியல் என்டர்டெயின்மெண்ட் படமாக இருக்கும் என்று இயக்குனர் தெரிவித்துள்ளார்.  இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் தற்போது இறுதி கட்ட பணிகள் நடந்து வருகின்றன. இதனை அடுத்து இந்த படத்தை டிசம்பர் மாதம் வெளியிடுவதாக இருந்த படக்குழுவினர் தற்போது ஜனவரியில் சங்கிராந்திக்கு வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

நாளை அனுஷ்கா பிறந்த நாள் என்பதால் அவருக்கு பிறந்த நாள் பரிசாக 'பாக்மதி' படத்தின் பர்ஸ்ட் லுக்கை படக்குழு இன்று மாலை வெளியிட திட்டமிட்டுள்ளனர். இதனால் ரசிகர்களுக்கு மட்டும் இன்றி அனுஷ்காவுக்கும் அவரது பிறந்த நாள் பரிசாக இருக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

 

தமிழ், தெலுங்கு என்று இருமொழிகளில் உருவாகும் இந்த படத்தை அசோக் இயக்குகிறார். யுவி கிரியேஷன் தயாரிப்பின் கீழ் வி.வம்சி கிருஷ்ணா ரெட்டி புரமோட் தயாரிக்கிறார். இந்த படத்திற்கு எஸ்.தாமன் இசையமைக்கிறார். நடிகை அனுஷ்கா, ஆதி பினிசெட்டி, ஜெயராம், உன்னி முகுந்தன் என்று பலர் நடிக்கின்றனர். 


அனுஷ்கா பிறந்த நாளையொட்டி பாக்மதி படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு


செய்தியாளர் பற்றி

விஷுவல் மீடியா துறையை சேர்ந்த மீனா ஸ்ரீ எழுத்து மற்றும் கலை துறையில் ஆர்வமாக உள்ளார். மீனா, உலகம் முழுவதும் புதிய விஷயங்களைப் பற்றி கற்றுக் கொள்வதில் ஆர்வம் கொண்டவர். நமது கற்றலுக்கு தேவையான விஷயங்கள் அனைத்தும் நம்மை சுற்றியுள்ள உலகத்திலிருந்தே கிடைக்கும் என நினைப்பவர். மேலும் இவர் சினிமா மற்றும் திரைப்பட தொடர்பான செய்திகளை நேசித்து வருகிறார். ... மேலும் படிக்க

meena shree

மீனா ஸ்ரீஎழுத்தாளர்