ads
2.0 படத்தின் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
மீனா ஸ்ரீ (Author) Published Date : Nov 28, 2017 17:28 ISTபொழுதுபோக்கு
சங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய்குமார், எமி ஜாக்சன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள 2.0 படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடெக்சன் பணியில் படக்குழுவினர் விறுவிறுப்பாக ஈடுபட்டு வருகின்றனர். லைக்கா நிறுவனம் தயாரித்த இப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். மேலும் நீரவ்ஷா ஒளிப்பதிவில் ஈடுபட்டு உள்ளார். இந்த படத்தின் இசை வெளியீடு துபாயில் சில நாட்களுக்கு முன்பு பிரமாண்டமான முறையில் நடைபெற்றது.
மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாக்கியுள்ள இப்படத்தினை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியிடுவதாக படக்குழுவினர் உறுதிப்படுத்தியுள்ளது. படத்தின் எதிர்பார்ப்புகள் ரசிகர்களுக்கிடையில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருக்கும் இந்நிலையில் படத்தின் வியாபாரமும் அதிகளவு சூடுபிடித்துள்ளது. தமிழ், ஹிந்தி மொழிகளில் வெளிவர உள்ள இப்படத்தின் பதிப்புகளின் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமத்தை பிரபல அமேசான் நிறுவனம் கைபற்றியுள்ளதாக ‘லைகா’ நிறுவனத்தை சேர்ந்த ராஜுமகாலிங்கம் தெரிவித்துள்ளார்.
அமேசான் (Amazon) நிறுவனம் AMAZON PRIME என்ற பெயரில் பல இந்திய மற்றும் வெளிநாட்டு திரைப்படங்களை ஆன்லைனில் (online) பார்க்கும் வசதியை தருகிறது. வருடாந்திர கட்டணமாக ரூபாய் 999 பெற்றுக்கொண்டு அணைத்து மொழி திரைப்படத்தை காண்பிக்கின்றது. சில முக்கிய திரைப்படங்களுக்கு கட்டணம் உண்டு. இங்கு உள்ள அணைத்து திரைப்படங்களும் உரிய முறையில் படத்தின் தயாரிப்பாளரிடம் அனுமதி பெற்று ஒளிபரப்படுகிறது.