ads
ஆஸ்கர் விருது பெற்ற அமெரிக்கன் விஏபிஎக்ஸ் ஸ்டூடியோ மீது வழக்கு பதிவா....விளக்கம் அளிக்கும் லைக்கா ?
மீனா ஸ்ரீ (Author) Published Date : Dec 12, 2017 21:48 ISTபொழுதுபோக்கு
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 2.0 படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவந்துள்ளது. இந்த படத்தில் எமிஜாக்சன், ஹிந்தி திரையுலகின் முன்னணி நடிகர் அக்க்ஷய் குமார் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். சங்கர் இயக்கியுள்ள இப்படத்தின் போஸ்டர், இசை, மேக்கிங் வீடியோ போன்றவை வெளிவந்தது. இந்நிலையில் படத்தினை அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் வெளியிடுவதாக படக்குழு முன்னதாகவே தகவலை தெரிவித்தது ஆனால் எதிர்பாராத விதமாக படத்தினை ஏப்ரல் மாதத்தில் வெளிவருவதாக படக்குழு தற்போது தெரிவித்துள்ளது.
இந்த தேதி மாற்றத்திற்கு காரணம் என்னவாக இருக்கும் என பலரும் கேள்வியை எழுப்பிய நிலையில், படத்தின் விஏபிஎக்ஸ் (VFX) வேலைகள் முடியாத காரணத்தினால் படத்தின் வெளியீட்டு தேதி மாற்றப்பட்டிருப்பதாக படத்தின் நிறுவனமே ஒப்புக்கொண்டது. இதன் காரணத்தினால் ஆஸ்கர் விருதினை வாங்கிய விஎஃ எக்ஸ் நிறுவனத்தின் மீது லைக்கா நிறுவனம் வழக்கு தொடர இருப்பதாக தகவல் வெளியாது. இதனால் திரைத்துறையினர் புகழ் பெற்ற அமெரிக்கன் விஏபிஎக்ஸ் ஸ்டூடியோ (American VFX Studio) நிறுவனத்தின் மீது வழக்கா....என்று அதிர்ச்சியில் இருந்தனர்.
இந்நிலையில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பாளர் சுபாஷ் கர்ணன் தரப்பில் இருந்து விளக்கம் பின்வரும் மாறு அளிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் விஏபிஎக்ஸ் (VFX) வேலைகள் உலக தரம் வாய்ந்ததாக இருக்க வேண்டும். படத்தினை பார்க்கும் ரசிகர்களுக்கு நல்ல முறையில் சென்றடைய வேண்டும். இதன் காரணத்தினால் சில தாமதங்கள் ஆகின்றது. இதனால் லைக்கா நிறுவனம் அமெரிக்கன் விஏபிஎக்ஸ் ஸ்டூடியோ (American VFX Studio) நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்வதாக வெளிவந்து கொண்டிருக்கும் தகவல்கள் வெறும் வதந்தியே...என்று தெரிவித்துள்ளனர்.