நடிகர்கள் சம்பளமும் உதவியாளர்கள் சம்பளமும் மாற்றம் முன்னணி நடிகர்கள் ஒப்புக்கொள்வார்களா?

       பதிவு : Mar 24, 2018 17:43 IST    
அறிவிக்கப்பட்ட புதிய அறிக்கையின் படி நடிகர்கள் சம்பளமும், உதவியாளர்கள் சம்பளமும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்ட புதிய அறிக்கையின் படி நடிகர்கள் சம்பளமும், உதவியாளர்கள் சம்பளமும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

நீண்ட நாட்களாக நடைபெற்று வந்த தயாரிப்பாளர் சங்க வேலைநிறுத்தம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. முன்னதாக விஷால், தற்போது நடந்து கொண்டிருப்பது போராட்டமல்ல சீர்திருத்தம் என தெரிவித்துள்ளார். இதனை அடுத்து கடந்த சில தினங்களாக திரைத்துறையின் முக்கிய பிரதிநிதிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

தற்போது இயக்குனர்கள் சங்கம் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் சங்கம் ஆகியோருடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. இதில் நடிகர்களின் உதவியாளர்களுக்கு பெப்சி ஒப்பந்தப்படி சம்பளம் வழங்கப்படும் அதற்கு மேல் தயாரிப்பாளர் சங்கம் தரப்பில் எந்த தொகையும் வழங்க படமாட்டாது என வலிறுத்தினார்கள். இதன் பிறகு நடிகர் சூர்யா உதவியாளர்களுக்கு சம்பளத்தை தர தான் தருவதாக முன் வந்தார்.

 

இவரை தொடர்ந்து நடிகர் கார்த்தி மற்றும் விஷால் ஆகியோர் உதவியாளர்கள் சம்பளத்தை தருவதற்கு முன்வந்தனர். இதனால் சினிமா துறையில் உதவியாளர்கள் சம்பளம் உயர பெருமளவு வாய்ப்புள்ளது. இதர முன்னணி நடிகர்களும் இதற்கு ஆதரவு தெரிவித்து முன்வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் நடிகர்களுக்கு படத்தின் வசூலை பொறுத்தே சம்பளம் நிர்ணயம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக அனைத்து முன்னணி நடிகர்களின் கோடி சம்பளம் குறைய உள்ளது. ஆனால் இந்த அறிவிப்பின்படி ரஜினி, கமல், விஜய், அஜித் ஆகியோர் சம்மதம் தெரிவிப்பார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

 


நடிகர்கள் சம்பளமும் உதவியாளர்கள் சம்பளமும் மாற்றம் முன்னணி நடிகர்கள் ஒப்புக்கொள்வார்களா?


செய்தியாளர் பற்றி

விக்னேஷ் சுற்றுப்புற சுகாதாரம் மற்றும் கல்வி சார்ந்த செய்திகளை பெருமளவு எழுதி வருகிறார். இவர் தனது செய்திகளில் கற்பனை திறனையும், புது புது தகவல்களையும் வெளிப்படுத்தி வருகிறார். இவர் செய்திகளை எழுதுவதில் வல்லவர். தனது திறமையால் சிறு தகவல்களை வைத்து அதன் மூலம் நம்மால் ஈன்ற அளவுக்கு தனது முயற்சிகளை வெளிப்படுத்துவார். அனைவரிடத்திலும் வெளிப்படையாக பழக கூடியவர். மற்றவர்களிடமிருந்து புது நுணுக்கங்களையும் நுட்பத்தையும் சேகரித்து தன்னுடைய அறிவை வளர்த்து கொள்வார். இவர் தான் சேகரிக்கும் தகவல்களை மிகவும் எளிமையான முறையில் மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் சிறப்பானதாக விளங்குகிறார். ... மேலும் படிக்க

Vignesh writer and reporter

விக்னேஷ்செய்தியாளர்