ads
10 வருடங்களுக்கு பிறகு மொழி இயக்குனருடன் இணைந்த ஜோதிகா
வேலுசாமி (Author) Published Date : Feb 28, 2018 10:29 ISTபொழுதுபோக்கு
நடிகை ஜோதிகா நடிப்பில் தற்போது வெளியாகி வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் படம் 'நாச்சியார்'. இந்த படத்தில் ஜோதிகா, ஜிவி பிரகாஷ், இவனா (அல்லினா) ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இவர்களின் நடிப்பு திறமைக்கு தற்போது வரை பாராட்டுகளும் வாழ்த்துக்களும் குவிந்த வண்ணம் உள்ளது.
நடிகை ஜோதிகா காவல் அதிகாரியாக முதன் முறையாக களமிறங்கிய இந்த படத்தில் சிறப்பாக நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்று வருகிறார். வித்தியாசமான கதைக்களத்தை தேர்வு செய்து முன்னணி நடிகையாக நடித்து வரும் ஜோதிகா தற்போது இந்தி படம் ரீமேக்கில் இணையவுள்ளார்.
இந்த தகவல் முன்னதாக வெளிவந்த நிலையில் தற்போது இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படம் இந்தியில் நடிகை வித்யாபாலன் நடிப்பில் வெளியான 'தும்ஹரி சுலு' படத்தின் ரீமேக்காக உருவாக உள்ளது. இந்த படத்தில் ஜோதிகா ரேடியோ நிறுவனத்தில் பணிபுரியும் பெண்ணாக நடிக்க உள்ளார்.
இதனால் அவர் சந்திக்கும் பிரச்சனைகளும், சமாளிக்கும் விதமும் படத்தின் கதை. இந்த படத்தை இயக்குனர் ராதாமோகன் இயக்க உள்ளார். இவர் நடிகை ஜோதிகா நடிப்பில் கடந்த 2007-இல் வெளியான 'மொழி' படத்தை இயக்கியவர். இந்நிலையில் தற்போது 10 வருடங்களுக்கு பிறகு ஜோதிகா நடிக்க உள்ள புது படத்தை இயக்க உள்ளார்.
இவர் இயக்கத்தில் இறுதியாக உப்பு கருவாடு, பிருந்தாவனம் போன்ற படங்கள் வெளியானது. தற்போது ஜோதிகா நடிப்பில் ராதா மோகன் இயக்கத்தில் உருவாகவுள்ள இந்த படத்தை போப்ட்டா நிறுவனம் சார்பில் தேசிய விருது பெற்ற எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளரான தனஞ்செயன் தயாரிக்க உள்ளார். இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை நடிகர் சூர்யா தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
Happy to announce that Director #RadhaMohan and Jo are working together again after #Mozhi Hoping to see the magic repeat. All the best to the entire Team and Producer @dhananjayang sir @BOFTAindia congratulations!
— Suriya Sivakumar (@Suriya_offl) February 28, 2018