நாச்சியார் படத்தின் மலையாள போஸ்டர் ரிலீஸ்

       பதிவு : Feb 10, 2018 10:48 IST    
naatchiyaar malayalam poster release naatchiyaar malayalam poster release

இயக்குனர் பாலா எழுத்து, தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் ஜோதிகா, இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகி வரும் நாச்சியார் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் வரவேற்புகளும் எதிர்பார்ப்புகளும் அதிகரித்து வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடெக்சன் பணியில் விறுவிறுப்பாக ஈடுபட்டு வரும் படக்குழு கடந்த  சில நாட்களுக்கு முன்பு படத்தின் போஸ்டர் மற்றும் டீசரை வெளியிட்டிருந்தனர். வெளிவந்த டீசரில் ஜோவின் வசனத்திற்கு பல எதிர்ப்புகள் ஏற்பட்டும் ரசிகர்கள் மத்தியில் வெகுவான வரவேற்பினை பெற்று வருகிறது. மேலும் ஜோதிகா டீசரில் வெளியான வசனம் குறித்து கடந்த நாட்களில் சில தகவலை வெளியிட்டிருந்தார். மேலும் படத்தினை வருகிற பிப்ரவரி 16ம் தேதி படக்குழு வெளியிடவுள்ளது.

இந்நிலையில் படத்தின் மலையாள போஸ்டரை ஜிவி பிரகாஷ் அவரது ட்விட்டர் மூலம் வெளியிட்டுள்ளார். தற்பொழுது இந்த போஸ்டருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும் இந்த போஸ்டரில் ஜோதிகா, ஜிவி பிரகாஷின் புகைப்படம் சிறப்பாக  இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.         

 

தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதை கலனை மையமாக வைத்து சிறந்த படங்களை இயக்குவதில் குறிப்பிடத்தகுந்தவர்களின் ஒருவர் இயக்குனர் பாலா. இவர் கடந்த 1999ம் ஆண்டில் வெளிவந்த 'சேது' படத்தின் மூலம் திரையுலகில் இயக்குனரானார். இந்த படத்தின் மூலம் சிறந்த இயக்குனருக்கான இந்திய  தேசிய விருது மற்றும் பிலிம் பேர் விருது வழங்கப்பட்டது. அதன் பின்னர் இவர் இயக்கத்தில் வெளிவந்த நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன், பரதேசி, தாரை தப்பட்டை போன்ற படங்கள் ரசிகர்கள் மற்றும் விமர்சனங்கள் ரீதியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது. மேலும் பிதாமகன் படத்திற்கு சிறந்த இயக்குனருக்கான பிலிம் பேர் விருது, நான் கடவுள் - சிறந்த இயக்குனருக்கான இந்திய தேசிய விருது மற்றும் விஜய் விருது, பரதேசி - விஜய் விருது, சீமா விருது மற்றும் பிலிம் பேர் விருதுகள் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவரது இயக்கத்தில் உருவாகியுள்ள 'நாச்சியார்' படத்தின் வரவேற்புகள் சற்று அதிகரித்து வருகிறது.    

naatchiyaar malayalam poster releasenaatchiyaar malayalam poster release
naatchiyaar malayalam poster release 1naatchiyaar malayalam poster release 1
naatchiyaar malayalam poster release 2naatchiyaar malayalam poster release 2
naatchiyaar malayalam poster release 3naatchiyaar malayalam poster release 3

நாச்சியார் படத்தின் மலையாள போஸ்டர் ரிலீஸ்


செய்தியாளர் பற்றி

விவசாயம் சார்ந்த அனைத்து தொழில்களிலும் அதிகளவு ஆர்வம் உடையவர். தற்பொழுது மக்களிடையே நிலவி வரும் சமூக வலைதளம், சினிமா தொடர் போன்றவற்றில் கவனம் செலுத்துபவர். அரசியல் சார்ந்த செய்திகளை அடியோடு வெறுப்பவர். சில நேரங்களில் ஓவியம் வரைதல், சிறந்த நாவல்களை படித்தல் போன்றவற்றில் கவனம் செலுத்துபவர். கடவுள் நம்பிக்கை உடையவர். நாளுக்கு நாள் வெளிவரும் புது புது சினிமா (திரைப்படம் ) சார்ந்த செய்திகளை மக்களிடையே கொண்டு சேர்பவர். ... மேலும் படிக்க

ratiga

ராதிகாஎழுத்தாளர்