ஜோதிகாவின் நாச்சியார் ரிலீஸ் தேதி அறிவிப்பு

       பதிவு : Jan 10, 2018 16:21 IST    
naatchiyaar release from feb 9th naatchiyaar release from feb 9th

இயக்குனர் பாலா எழுத்து, தயாரிப்பு, இயக்கத்தில் ஜோதிகா, ஜிவி.பிரகாஷ் இணைந்து நடித்து வரும் படம் 'நாச்சியார்'. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர் போன்றவை வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்து. மேலும் டீசரில் வெளிவந்த ஜோ- வின் வசனத்திற்கு பல எதிர்ப்புகள் கிளம்பியது. இதன் காரணத்தினால் ஜோ ரசிகர்கள் சற்று வருத்தத்தில் இருந்தனர். இந்த வார்த்தை மூலம் வழக்கு பதிவு செய்யும் அளவிற்கு பிரச்சனை வளர்ந்தது.     

காவல் துறை அதிகாரியாக ஜோதிகா களமிறங்கியுள்ள இப்படத்தில் ஜிவி பிரகாஷ் குப்பத்து நாயகனாக நடித்துள்ளனர். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். மேலும் இவர் இசையில் உருவான 'உன்னைவிட்டாயாருமில்ல' என்ற பாடலை ஜிவி.பிரகாஷ் குமார்  பாடியுள்ளார். இந்த தகவலை சில நாட்களுக்கு முன்பு ஜிவி அவரது ட்விட்டரில் வெளியிட்டிருந்தார்.    

 

இந்நிலையில் படத்தினை வருகிற பிப்ரவரி மாதம் 9ம் தேதியில் திரையிட படுவதாக படக்குழு அதிகார பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. டீசரில் வெளிவந்த வசனத்தில் ஏற்பட்ட பிரச்சனையின் போது ஜோ படத்தினை பார்ப்பதற்கு முன்னதாகவே அது போன்று விமர்சனங்கள் வெளிப்படுத்த வேண்டாம் என்று கூறியிருந்தார். இதன் காரணத்தினால் படத்தின் எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. மேலும் படத்தின் ட்ரைலர் மற்றும் இசையை விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.   
 


ஜோதிகாவின் நாச்சியார் ரிலீஸ் தேதி அறிவிப்பு


செய்தியாளர் பற்றி

விவசாயம் சார்ந்த அனைத்து தொழில்களிலும் அதிகளவு ஆர்வம் உடையவர். தற்பொழுது மக்களிடையே நிலவி வரும் சமூக வலைதளம், சினிமா தொடர் போன்றவற்றில் கவனம் செலுத்துபவர். அரசியல் சார்ந்த செய்திகளை அடியோடு வெறுப்பவர். சில நேரங்களில் ஓவியம் வரைதல், சிறந்த நாவல்களை படித்தல் போன்றவற்றில் கவனம் செலுத்துபவர். கடவுள் நம்பிக்கை உடையவர். நாளுக்கு நாள் வெளிவரும் புது புது சினிமா (திரைப்படம் ) சார்ந்த செய்திகளை மக்களிடையே கொண்டு சேர்பவர். ... மேலும் படிக்க

ratiga

ராதிகாஎழுத்தாளர்