ads

வைரலாகும் சாய் பல்லவி புதிய புகைப்படம்

sai pallavi new stills viral

sai pallavi new stills viral

இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன் இயக்கத்தில் கடந்த 2015ல் வெளிவந்த 'ப்ரேமம்' படத்தின் மூலம் மலையாள திரையுலகில் சாய் பல்லவி அறிமுகமானார். இந்த படத்தில் நிவின் பாலி நாயகனாக நடித்திருந்தார். காதலை கலந்த அதிரடி காட்சிகளை மையமாக கொண்டு உருவான இப்படத்திற்கு இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்புகள் அதிகரித்து வருகிறது. இப்படத்தில் சாய் பல்லவி மலர் டீச்சர் கதாபாத்திரத்தை சிறப்பாக கையாண்டதின் காரணத்தினால் தமிழ் முதல் மலையாளம் திரையுலம் வரை நல்ல வரவேற்பினை பெற்று ரசிகர்கள் வட்டாரத்தை அதிகப்படுத்தியுள்ளார். தற்பொழுது இயக்குனர் ஏஎல். விஜய் இயக்கும் நாயகிக்கு முக்கியதும் கொடுக்கும் 'கரு' படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இதற்கு அடுத்ததாக தனுஷுக்கு ஜோடியாக 'மாரி 2' படத்தில் இணைந்துள்ளார். மேலும் சூர்யாவின் 36வது படத்தில் நாயகியாகவும் நடித்து வருகிறார். தமிழில் மட்டும் இல்லாமல் தெலுங்கு திரையுலகிலும் சில படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.         

தற்பொழுது சாய் பல்லவியின் வரவேற்புகள் ரசிகர்களிடம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவர் தமிழ், தெலுங்கு என இரு  திரையுலகிலும் முன்னணி நடிகர்களுடன் இணைந்து சிறப்பான தோற்றத்தை கையாண்டு வருகிறார். நாயகியாக நடிப்பதை தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய துவம் வாய்ந்த வேடங்களிலும் நடித்து வருவதாக தகவல் வந்துள்ளது. இந்நிலையில் சாய் பல்லவியின் ஒரு புதுவித ஹேர் ஸ்டைல் கொண்ட புகைப்படம் வலைத்தளத்தில் பரவி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியில் பல கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். மேலும் இந்த புதுவித தோற்றம் அவரது அடுத்த படத்திற்காக இருக்கலாம் எனவும் மக்களிடையே பல கருத்துக்கள் நிலவி வருகிறது.  

வைரலாகும் சாய் பல்லவி புதிய புகைப்படம்