சிவகார்த்திகேயனின் சீம ராஜா படப்பிடிப்பை நிறைவு செய்த சமந்தா

       பதிவு : Mar 11, 2018 07:51 IST    
சிவகார்த்திகேயனின் சீம ராஜா படப்பிடிப்பை நிறைவு செய்த சமந்தா. சிவகார்த்திகேயனின் சீம ராஜா படப்பிடிப்பை நிறைவு செய்த சமந்தா.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இறுதியாக வெளியான படம் ‘வேலைக்காரன்’. இந்த படம் 24ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் வெளியானது. சமூகத்தில் தற்போது மார்க்கெட்டிங் என்ற பெயரில் நடக்கும் தவறுகளையும், தொழிற்சாலைகளால் தயாரிக்கப்படும் உணவு பொருட்களின் குறைகளையும் ஒரு வேலைக்காரனாக சிவகார்த்திகேயன் மக்களுக்கு எடுத்துரைத்தார்.

இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தற்போது இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் 'சீமாராஜா' என்ற படத்தில் நடித்து வருகிறார். சிவகார்த்திகேயனின் பிறந்த நாளில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும், படத்தின் தலைப்பையும் படக்குழுவினர் வெளியிட்டனர். 

 

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சமந்தா முதன் முறையாக இணைந்துள்ளார். மேலும் சிவகார்த்திகேயனின் தந்தை கதாபாத்திரத்தில் நெப்போலியனும், வில்லி கதாபாத்திரத்தில் சிம்ரனும் நடித்து வருகின்றனர். இவர்களுடன் நடிகர் சூரி, லால், மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு, மனோபாலா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளனர். 

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் தற்போது சமந்தா சம்மந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் முடிந்து விட்டதாக படக்குழு  தெரிவித்துள்ளது. இந்த படத்தையும் 24 ஏஎம்ஸ்டூடியோஸ் நிறுவனம் 'வேலைக்காரன்' படத்தை தொடர்ந்து தயாரித்து வருகிறது. தயாரிப்பாளர் ஆர்டி ராஜா தயாரித்து வரும் இந்த படத்திற்கு இமான் இசையமைத்து வருகிறார். இந்த படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாக உள்ளது.

 


சிவகார்த்திகேயனின் சீம ராஜா படப்பிடிப்பை நிறைவு செய்த சமந்தா


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்