ads

கமல் ஹாசனின் இந்தியன் 2 படத்தில் இணைந்த அஜய் தேவ்கன் அதிகாரபூர்வ அறிவிப்பு

இந்தியன் 2 படத்தின் மூலம் அஜய் தேவ்கனை தமிழுக்கு இயக்குனர் ஷங்கர் அறிமுகப்படுத்த உள்ளார்.

இந்தியன் 2 படத்தின் மூலம் அஜய் தேவ்கனை தமிழுக்கு இயக்குனர் ஷங்கர் அறிமுகப்படுத்த உள்ளார்.

உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் தூங்காவனம் படத்திற்கு பிறகு தமிழில் மூன்று வருடங்களுக்கு பிறகு தற்போது வெளியாகவுள்ள படம் 'விஸ்வரூபம் 2'. இந்த படம் வெளியாவதற்கு இன்னும் மூன்று நாட்களே உள்ளது. இதற்காக ரசிகர்கள் ஆர்வமுடன் காத்து கொண்டிருக்கின்றனர். இந்த படத்திற்கு பிறகு இவருடைய நடிப்பில் இந்தியன் 2, சபாஷ் நாயுடு, மருத நாயகம் போன்ற படங்கள் உருவாகி வருகிறது.

இதில் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் 1996இல் வெளியான 'இந்தியன்' படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போதுள்ள அரசியல் சூழலில், அரசியலை மையமாக வைத்து உருவாகும் இந்த படம் கமல் ஹாசனுக்கு ஆதரவாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகரான அஜய் தேவ்கன் நடிக்க உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே இயக்குனர் ஷங்கர், தனது ரஜினிகாந்தின் '2.0' படத்தின் மூலம் நடிகர் அக்ஷய் குமாரை தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்த உள்ளார். இவரை தொடர்ந்து தற்போது பாலிவுட் முன்னணி நடிகரான அஜய் தேவ்கனை தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்துகிறார். மேலும் இந்த படத்தில் முதன் முறையாக நயன்தாரா கமல் ஹாசனுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். இது தவிர காமெடி நடிகராக வைகை புயல் வடிவேலு நடிப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த அறிவிப்பை விரைவில் படக்குழு வெளியிட உள்ளது.

கமல் ஹாசனின் இந்தியன் 2 படத்தில் இணைந்த அஜய் தேவ்கன் அதிகாரபூர்வ அறிவிப்பு