ads

மதுரையில் வேதாளம் திரைப்படத்தை கொண்டாடிய அஜித் ரசிகர்கள்

சண்முகா திரையரங்கம், மதுரை. வேதாளம் திரைப்படத்தை கொண்டாடிய ரசிகர்கள்

சண்முகா திரையரங்கம், மதுரை. வேதாளம் திரைப்படத்தை கொண்டாடிய ரசிகர்கள்

சிறுத்தை சிவா அவர்களின் இயக்கத்தில் அஜித் அவர்கள் நடித்து வெளிவந்து மிக பெரிய வெற்றி படம் வேதாளம். இந்த திரைப்படம் குழந்தைகள் முதல் அணைத்து வயதினரையும் கவர்ந்ததால் 2015-ஆம் ஆண்டின் மிக பெரிய வெற்றி படமாக அமைந்தது. இயக்குனர் சிவா அவர்கள் வேதாளத்திற்கு முன் இயக்கிய படம் வீரம், இது கிராமத்து கதை என்றாலும் மிக பெரிய வெற்றி படமாக அமைந்தது. இதில் தம்பிகளின் பாசத்தை மையமாக வைத்து இயக்கி இருந்தார். வேதாளத்தில் தங்கையின் பாசத்தை மையமாக வைத்து இயக்கி இருந்தார்.

வேதாளத்திற்கு பின் விவேகம் திரைப்படத்தை மனைவியின் பாசத்தை மையமாக வைத்து இயக்கினார், இதுவும் வெற்றி படமாக அமைந்தது. தற்போது விஸ்வாசம் திரைப்படத்தை இயக்கி வருகிறார். வெளிவந்த முன்று படங்களும் முற்றிலும் மாறுபட்ட கதையம்சத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. அஜித் அவர்கள் தொடர்ந்து 4 படத்தையும் ஒரே இயக்குனர் நடிப்பில் நடிப்பது இதுவே முதன் முறை. 

தமிழகத்தில் தற்போது நடந்து வரும் தயாரிப்பாளர் சங்க போராட்டத்தினால் புதிய தமிழ் படங்கள் திரையிடுவதற்கு தடை போடப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளில் வேறு வழியின்றி பழைய வெற்றி படங்களை திரையிட திரையரங்கு உரிமையாளர்கள் முன்வந்தனர். அதில் ரசிகர்களின் வேண்டுகோளின் படி, ஒரு வாரத்திற்கு முன் விஜய் அவர்கள் நடித்த மெர்சல் படத்தை திரையிட்டனர். இந்த வாரம் வேதாளம் திரை படத்தை ஒவ்வொரு மாவட்டத்திலும் குறிப்பிட்ட திரையரங்குகளில் வெளியிட்டனர். 

மாபெரும் வெற்றி படமான வேதாளத்தை மதுரை சண்முகா திரையரங்கில் திரையிட்டதால் மிகுந்த சந்தோஷத்தில் புதிய படத்தை போல் அஜித் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் பட்டாசுகள் வெடித்து கொண்டாடி அரங்கை நிரப்பினர். 