ads
கேவி ஆனந்த் சூர்யா கூட்டணியில் இருந்து விலகிய பிரபலம்
மோகன்ராஜ் (Author) Published Date : Jul 20, 2018 16:16 ISTபொழுதுபோக்கு
நடிகர் மற்றும் தயாரிப்பாளரான சூர்யா நடிப்பில் தானா சேர்ந்த கூட்டம் படத்திற்கு பிறகு இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் 'என்ஜிகே' படம் உருவாகி வருகிறது. சமூக போராளியாக சூர்யா நடித்து வரும் இந்த படத்தில் சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் என இரு நாயகிகள் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு பிறகு சூர்யா தனது 37வது படத்திற்கு மீண்டும் கேவி ஆனந்துடன் இணைந்துள்ளார்.
ஏற்கனவே இவர்களது கூட்டணியில் வெளியான அயன், மாற்றான் போன்ற படங்கள் மாபெரும் வெற்றிபெற்றுள்ள நிலையில் மீண்டும் இந்த கூட்டணி இணைந்துள்ளது. லைக்கா ப்ரொடக்சன் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்க உள்ள இந்த படத்தில் மோகன்லால், சயிஷா, அல்லு சிரிஷ், போமன் இராணி, சமுத்திரக்கனி போன்ற முன்னணி திரைபிரபலங்கள் நடிக்க உள்ளனர்.
இந்நிலையில் இந்த படத்தில் இருந்து தெலுங்கு நடிகரான அல்லு சிரிஷ், தான் விலகி கொள்வதாக டிவிட்டரில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவரது டிவிட்டரில் "நான் தற்போது தெலுங்கில் உருவாகிவரும் ABCD படத்தில் நடித்து வருகிறேன். இரண்டு படங்களின் படப்பிடிப்பு தேதிகளை ஒரே நேரத்தில் நடக்க உள்ளதால் சூர்யா படத்தில் என்னால் பங்கேற்க முடியவில்லை.
தேதியையும் மாற்ற முடியாத சூழலில் உள்ளேன். இதனால் நானாக சூர்யா படத்தில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன். எனது நிலையை கேவி ஆனந்த் சார் நன்றாக புரிந்து கொண்டார். அதனால் என்னுடைய இந்த முடிவுக்கு சம்மதம் தெரிவித்துள்ளார். என்னை இந்த படத்தில் இணைத்த படக்குழுவினருக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். மீண்டும் இது போன்ற வாய்ப்பு கிடைத்தால் நடிக்க ஆவலுடன் உள்ளேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
கேவி ஆனந்த் சூர்யா கூட்டணியில் இருந்து அல்லு சிரிஷ் விலகியது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. அல்லு சிரிஷ் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ள நடிகர் குறித்து படக்குழு கலந்தாலோசித்து வருகிறது. விரைவில் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க உள்ள நடிகர் யார் என்பதை படக்குழு விரைவில் வெளியிட உள்ளது.