அமலாபால் தெலுங்கில் ரீ-என்ட்ரி

       பதிவு : Nov 13, 2017 14:32 IST    
அமலாபால் தெலுங்கில் ரீ-என்ட்ரி

'மைனா' படத்தின் மூலம் பேசப்படும் அளவிற்கு ரசிகர்களை கவர்ந்த அமலா பால் வேட்டை, தலைவா, வேலையில்லா பட்டதாரி, அம்மா கணக்கு போன்ற பல வெற்றி படங்களை கொடுத்ததினை தொடர்ந்து, திருட்டு பயலே 2, பாஸ்கர் ஒரு ராஸ்கல், சண்டகோழி 2 போன்ற தமிழ் படங்களிலும் 'காயம்குளம் கொச்சுண்ணி' மலையாள படத்திலும் நடித்து வருகிறார். இதில் சில படங்கள் வெளிவர உள்ளது.   

இந்நிலையில் சுசி கணேசன் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் நவம்பர் 30ம் தேதி வெளியிட உள்ள 'திருட்டு பயலே 2' படத்தில் அமலாபால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் மூலம் அமலாபால் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தெலுங்கு திரையுலகில் ரீ-என்ட்ரி கொடுக்கவுள்ளார். தெலுங்கில் 'டங்கொடாச்சடு' தலைப்பில் வெளியிடப்படும் 'திருட்டு பயலே 2' படத்தின் மூலம் அதிகளவு வரவேற்பினை பெற்று நேரடியாக தெலுங்கு திரையுலகில் நடிப்பதாக அமலாபால் கூறியுள்ளார்.  

 

இதற்கு முன்னதாகவே லவ் பெயிலியர், நாயக், இடராமயில்தோ போன்ற சில தெலுங்கு படங்களில் நடித்துள்ள அமலாபால் மாறுபட்ட வேடத்தில் ரசிகர்கள் விரும்பும் வகையில் 'திருட்டு பயலே 2' படத்தில் நடித்திருப்பதாக படக்குழுவினர் கூறியுள்ளனர்.     
 


அமலாபால் தெலுங்கில் ரீ-என்ட்ரி


செய்தியாளர் பற்றி

மோகன், சிறு வயதிலிருந்தே அறிவாளியாக திகழும் இவர் கணிதத்தில் நன்கு திறமை வாய்ந்தவராவார். இவர் தனது திறமையால் பல பாராட்டுகளை பெற்றவர். கற்றல் மற்றும் கற்பித்தலில் வல்லவராக திகழும் இவர் மிகவும் பின்தங்கிய குழந்தைகளுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். ... மேலும் படிக்க

Mohan

மோகன்ராஜ்எழுத்தாளர்