ads
அருவி படத்தின் டீசர்
மீனா ஸ்ரீ (Author) Published Date : Nov 09, 2017 14:20 ISTMovie News
ஒரு நல்ல பெண்ணினால் சமுதாயத்துடன் ஒன்றி வாழமுடியாமல் ஏற்படும் கஷ்டத்தின் வலியை சொல்லும் அடிப்படையில் எடுக்கப்பட்ட அருவி படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர், பாடல் போன்றவை முன்னதாவே வெளிவந்துள்ளது. அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கம் இப்படத்தில் ஷெல்லி சலிஸ்ட் ஒளிப்பதிவாளராகவும், பிந்து மாலினி மற்றும் வேதாந்த பரட்வஜ் இசையமைப்பாளராகவும் இணைத்துள்ளனர்.
ஜோக்கர் படத்தை தயாரித்த ட்ரீம் வாரியர் பிக்சர் தயாரிக்கும் இப்படத்தில் அதிதி பாலன், லட்சுமி கோபாலஸ்வாமி, ஷுவெத சேகர் போன்ற புது முகங்களை கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. பெண்ணை முன்னிலையில் வைத்து எடுத்துள்ள இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று படக்குழுவினர் கூறுகின்றனர்.
இந்நிலையில் படத்தின் டீசர் பார்க்கும் போது, தமிழ் நாட்டில் தீவிரவாத தாக்கம் இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் மூலம் காவல் நிலையத்திற்கு தகவல் வருவது போன்றும் விசாரணைகள் பல நடக்கும் போது நாயகி இதில் உடன்பட்டிருப்பதாக சந்தேகித்து விசாரணை நடத்தும் காவல் துறையினர், தகாத வார்த்தைகள் பயன் படுத்துவது போன்று தெரிகிறது. இந்த விசாரணையின் இறுதியில் துணிச்சலான பெண் போன்று நாயகி நடந்து கொள்வதும் குறிப்பிடத்தக்கது.
adsஅருவி படத்தின் டீசர்
Related News
ads