ads

மருத்துவர் வேடத்தை கையாளாவிருக்கும் பாகுபலி இயக்குனர்

rajamouli to play doctor roll in new film

rajamouli to play doctor roll in new film

தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குனரான ராஜமௌலி பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார். இவர் முதல் முதலில் தெலுங்கில் வெளிவந்த 'ஸ்டூடண்ட் நம்பர்.1' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.  ஜூனியர் என் டி ஆர் நாயகனாக நடித்திருந்த இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு   கிடைத்திருந்தது. இந்த வெற்றி படத்தினை தொடர்ந்து சத்ரபதி, யமதொங்கா போன்ற தெலுங்கு படங்களை இயக்கி நல்ல வரவேற்பினை பெற்றிருந்தார். மேலும் இவர் இயக்கத்தில் வெளிவந்த 'ஸ்டூடண்ட் நெம்பர் 1' என்ற படத்தினை அதே தலைப்பில் தமிழில் வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து 'சிம்மாத்திரி' படத்தினை 'கஜேந்திரா' என்ற தலைப்பிலும், 'விக்கரமகுடு' படத்தினை  'சிறுத்தை' என்ற தலைப்பிலும் தமிழில் வெளியிடப்பட்டு தமிழ் திரையுலகிலும் வெகுவான வரவேற்பினை பெற்றிருந்தார். 

தெலுங்கு திரையுலகில் முன்னணி இயக்குனர் ராஜமௌலி பல வெற்றி படங்களை கொடுத்ததை தொடந்து படங்களிலும் நடிப்பதற்கும் ஆர்வம் காண்பித்து வருகிறார். இது வரை கெஸ்ட் ரோலில் மட்டும் நடித்து வந்த நிலையில் அவரது உதவி இயக்குனர் குமார் இயக்கவிருக்கும் ஒரு புது படத்தில் முழுநீல படத்திலும் இடம் பெறுவதாக தகவல் வந்துள்ளது. மேலும் இப்படத்தில் இயக்குனர் ராஜமௌலி மருத்துவராக வளம் வர இருக்கிறாராம். இந்த விறுவிறுப்பான தகவலை தொடந்து படத்தில் வில்லன் கெட்டப்பையும் கையாளவிருப்பதாக தகவல் வந்துள்ளது. இந்த தகவலின் அதிகார பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.      

கடந்த 2015ல் வெளிவந்த 'பாகுபலி' படத்தின் மூலம் தமிழ் திரையுலம் முதல் தெலுங்கு திரையுலம் வரை படத்திற்கு மாபெரும் வரவேற்பினை ரசிகர்கள் மத்தியில் கிடைத்திருந்தது. மேலும் இவர் இயக்கிய படங்களின் மூலம் சிறந்த இயக்குனர் மற்றும் எழுத்தாளருக்காக நந்தி விருது, பிலிம் பேர் விருது, தேசிய விருது, சீமா விருது, சினிமா விருது என பல விருதுகளை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.          

மருத்துவர் வேடத்தை கையாளாவிருக்கும் பாகுபலி இயக்குனர்