ads

விஜய் 62 வில் நடிக்க மறுத்த ஓவியா

vijay 62 movie updates

vijay 62 movie updates

துப்பாக்கி, கத்தி படத்தினை தொடர்ந்து மூன்றாவது முறையாக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் நடிகர் விஜய் கூட்டணி இணைந்துள்ளது. இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மெர்சலின் வசூல் சாதனையை ஈடுகட்டும் அளவிற்கு தரமான திரைப்படத்தை கொடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளார். இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் சமூகம் சார்ந்த கருத்துக்களை மக்களுக்கு தனது ஒவ்வொரு படங்கள் மூலம் தெரிவித்து வருகிறார். இந்நிலையில், தற்போது விஜய் 62 வது படம் விவசாயம் சார்ந்த படம் என்று படக்குழு தெரிவித்தது. 

ஏற்கனவே கத்தி படத்தில் விவசாயம் சார்ந்த கருத்துக்களுக்கு ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. ஆகையால் இந்த படத்திற்கு ரசிகர்கள் அடுத்தடுத்த அறிவிப்பிற்கு ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்க உள்ளார். இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் பிக்பாஸ் ஓவியாவிடம் பேசப்பட்டது. கதாநாயகி கதாபாத்திரம் இல்லாததால் அதனை நிராகரித்து விட்டார். தற்போது இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் ஓவியாவுக்கு பதிலாக பிக்பாஸ் ஜூலி நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

விஜய் 62 வில் நடிக்க மறுத்த ஓவியா