ads

ரித்விகாவையும் ஜனனியையும் ரொம்பவே மிஸ் பண்ணுவேன் - தாடி பாலாஜி

கடந்த வாரம் டபுள் ஏவிக்சனில் வெளியேறிய தாடி பாலாஜி பிக்பாஸ் ஹவுஸ் மெட்ஸ் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

கடந்த வாரம் டபுள் ஏவிக்சனில் வெளியேறிய தாடி பாலாஜி பிக்பாஸ் ஹவுஸ் மெட்ஸ் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

பிக்பாஸ் சீசன் 2வில் கடந்த வாரம் மட்டும் சற்று மாறுதலாக டபுள் ஏவிக்சன் நடந்தது. இதனால் ஆறு பேர் இருந்த பிக்பாஸ் வீட்டில் தற்போது நான்கு பேர் மட்டுமே உள்ளனர். இந்த ஏவிக்சனில் பாலாஜியும், யாஷிகாவும் வெளியேற்றப்பட்டனர். இதில் யாஷிகா வெளியேறியது ரசிகர்களுக்கு டிவிஸ்ட்டாக இருந்தது. ஆனால் முன்னதாக யாஷிகா, டாஸ்க்கில் வென்றதால் 5 லட்சம் வென்றிருந்தார். இதனால் யாஷிகாவுக்கு 5லட்சமே போதும் என்று பிக்பாஸ் வெளியேற்றியிருக்கலாம் என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

இந்த பிக்பாஸ் மூலம் பாலாஜி தனது குடும்பத்துடன் மீண்டும் இணைந்துள்ளார். வெளியே வந்ததும் அவர் அளித்த பேட்டியில் "எனக்கே கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கு. இன்னும் 105 நாட்களே இருக்கும் போது 98 நாட்களில் வெளியே வந்திருக்கிறேன். மிஞ்சியிருக்கும் 6 நாட்களையும் பிக்பாஸ் வீட்டில் இருந்திருந்தால் மன நிறைவா இருந்திருக்கும். நா மட்டும் இல்ல, யார் வந்தாலும் உள்ள வந்தால், வெளியே போகும் போது சேஞ் ஆகி போக வேண்டும் என்ற நினைப்பு தான் இருந்திருக்கும்.

பிக்பாஸ் வீட்டில் இரண்டு விஷயத்தை ரொம்பவே மிஸ் பண்ணுவன். ஒன்னு கிச்சன், இன்னொன்னு இரவில் எல்லாரும் ஒக்காந்து பேசும் ஷோபா செட். நித்யா உள்ள வந்தவுடனே கண்டிப்பா சண்ட காண்பாரம்னு மட்டும் தெரியும். சரி, பிரேம்ஜி சொன்ன மாதிரி 'எவ்வளவோ பாத்துட்டோம், இத பாக்கமாட்டோமா' என்ற மைண்ட் செட்ல தான் உள்ள வந்தன். என்ன எனக்கே அறிமுகப்படுத்தியது இந்த பிக்பாஸ் ஷோ தான். இதுக்கு அப்புறம் எனக்கு கிடைச்ச அதிஷ்டம் என்னனா, நித்யாவும், போஷிகாவும் என்னோட இருக்கனும்னு நினைச்சன்.

அது நடந்துருச்சு.நான் மகத் பாத்து தான் என்ன மாத்திக்கிட்டேன். அவர் ரொம்பவே கோபப்படுவாரு, அவர அடக்கவே டைம் சரியா இருக்கும். இப்படி மத்தவங்களுக்கு அட்வைஸ் பண்ணி, பண்ணி நாமலே மாறிட்டோம். பாத்தவுடனே நம்ம வீட்டு பொண்ணு மாறினு ஜனனியை தான் நினைச்சன், அவர் தான் நான் கேம்ல வின் பண்ணனும்னு நினைச்சாங்க. ஆனா என்ன பொறுத்தவரைக்கும் இந்த 98 நாள்ல கேம்ல வின் பண்ணத விட லைப்ல வின் பண்ணிருக்கன். நீங்க இந்த பிக்பாஸ் ஷோவை பாத்தாவே தெரியும், விசு படம் மாறி, 5 பொண்ணுங்க, ஒரு அப்பா.

இதுங்கள மேக்கவே எனக்கு சரியா இருக்கும். ஐந்து பேருமே டெர்ரரா இருப்பாங்க. வேணும்னே பெட்ல இருக்குறது எல்லாத்தையும் கலைச்சுட்டு போயிருவாங்க. வீட்ல இருக்கும்போதும் போஷிகா இப்படி தான் பண்ணுவா. ஆனா வீட்ல ஒரு போஷிகா தான், அங்க வந்து ஐந்து போஷிகா. அதனால எது என்ன பண்ணுனும்னு எனக்கு பாத்துக்குவே சரியா இருக்கும். சென்றாயன எல்லாருமே ஆரம்பத்துல ஒரு வெகுளி என்ற வேன்ல ஏத்திட்டாங்க. அவரும் இந்த வேன்ல இருந்து கீழ இறங்குன மாட்டிக்குவமோனு பயந்து அதுலே பயணம் செஞ்சாரு.

எனக்கு வீட்ல பிடிக்காத ஒரே விஷயம் ஸ்ட்ரேட்டஜி. இந்த கோலமாவு டாஸ்க்ல, செம சண்டை, ஐஸ்வர்யா ஜனனியோடது தள்ளுனா, ஜனனி பதிலுக்கு ஐஸ்வர்யாவது தள்ளுனா, இதுல சிவனேனு நிண்டுனு இருந்த என்னோடது ஏன் தள்ளுனாங்கனு தெரில. இது என்னனு பழைய சண்டை எல்லாம் மனசுல வச்சுட்டு கேம்ல விளையாடுறது தான் காரணம். எல்லாருமே பாலாஜிக்கிட்ட, குப்பை கொட்ன மேட்டர தான் எதிர்பார்ப்பாங்க. அந்த சமயம் எனக்கு குப்பையா குடும்பமானு தோணுச்சு. இதே பழைய பாலாஜினா அங்க நடக்குறது வேற.

அப்புறம் ஷாரிக், மும்தாஜ் மேடம் கிட்ட பிகேவ் பண்ண விஷயம் எனக்கு ரொம்பவே பிடிக்காத ஒரு விஷயம். அவர்கிட்ட நடுவர் பதவி கொடுத்தவுடனே, அவர்கிட்ட சில மாறுதல பாத்தேன். ரித்விகாவை செளமியா மாறி சிஸ்டர்னு தான் கூப்பிடுவன். அவர் எப்பவுமே, அவர் குடும்பம், போராட்டம் பத்தி நிறைய பேசுறதுனால அவர ரொம்பவே மிஸ் பண்ணுவன்." என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் அவருடைய மனைவி நித்யாவும் "பிக்பாஸ் வீட்ல பாலாஜியோட நடந்துறகெல்லாம் பாக்கும் போது எனக்கே ஆச்சர்யமா இருந்துச்சு. இது பழைய பாலாஜியானு. இந்த பாலாஜிக்காக தான் இத்தன வருஷம் காத்திருந்தோம். இந்த முடிவு எனக்காக மட்டுமல்ல, போஷிகாவுக்காக தான்" என்று நித்யா தெரிவித்துள்ளார்.

ரித்விகாவையும் ஜனனியையும் ரொம்பவே மிஸ் பண்ணுவேன் - தாடி பாலாஜி