தனது ரசிகரின் கடைக்கு ஓவியா திடீர் வருகை

       பதிவு : Nov 25, 2017 22:16 IST    
bigg boss oviya sudden visit fans shop bigg boss oviya sudden visit fans shop

நடிகர் கமல்ஹாசன் தலைமையில் பிக்பாஸ் நிகழ்ச்சி நடந்தது. இதன் மூலம் பங்கேற்ற அனைத்து பிரபலங்களும் தற்போது மிகவும் பிரபலமாக வலம் வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் அனைவருக்கும் பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஓவியாவுக்கு தனியாக ரசிகர்களிடையே ஒரு ஆர்மியே இருக்கிறது. ரசிகர்கள் 'வோட் பார் ஓவியா' என்று முழக்கம் உருவாக்கினர். சென்னையில் உள்ள விஷ்ணு சுவிட்ஸ் அண்ட் பேக்கர்ஸ் கடையில் வோட் பார் ஓவியா என்று ரசீது சீட்டில் அச்சிட்டு பிரபலப்படுத்தி வந்தனர். இந்த நிகழ்ச்சியில் ஓவியா வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் எதிர்பாராத காரணத்தினால் வெளியேற்றப்பட்டார். தற்போது தனக்கு ஆதரவு அளித்த விஷ்ணு சுவிட்ஸ் அண்ட் பேக்கர்ஸ் என்ற கடைக்கு திடீரென வருகை தந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். தனது ரசிகர்களிடம் புகைப்படம் எடுத்து அவர்களை சந்தோசப்படுத்தினார். இது குறித்து சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.  

 பிக்பாஸ் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி நடிகர் கமல் ஹாசன் தலைமையில் ஒளிபரப்பப்பட்டது. இந்த நிகழ்ச்சி நெதர்லாந்தின் எண்டமோல் நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட பிக்பிரதர் என்ற நிகழ்ச்சியை பின்பற்றியது. இந்த நிகழ்ச்சியில் சில விதிமுறைகளை கையாண்டு சினிமா பிரபலங்கள் பங்கேற்றனர்.  பங்கேற்ற சினிமா பிரபலங்களில் நடிகை ஓவியாவும் ஒருவர். இவர் இயற்பெயர் ஹெலன் நெல்சன் 2010-இல் இவரது பெயரை ஓவியா என்று மாற்றம் செய்து களவாணி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதனை அடுத்து நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். 

 


தனது ரசிகரின் கடைக்கு ஓவியா திடீர் வருகை


செய்தியாளர் பற்றி

விஷுவல் மீடியா துறையை சேர்ந்த மீனா ஸ்ரீ எழுத்து மற்றும் கலை துறையில் ஆர்வமாக உள்ளார். மீனா, உலகம் முழுவதும் புதிய விஷயங்களைப் பற்றி கற்றுக் கொள்வதில் ஆர்வம் கொண்டவர். நமது கற்றலுக்கு தேவையான விஷயங்கள் அனைத்தும் நம்மை சுற்றியுள்ள உலகத்திலிருந்தே கிடைக்கும் என நினைப்பவர். மேலும் இவர் சினிமா மற்றும் திரைப்பட தொடர்பான செய்திகளை நேசித்து வருகிறார். ... மேலும் படிக்க

meena shree

மீனா ஸ்ரீஎழுத்தாளர்