ads

துருவ் விக்ரமின் வர்மா படத்தில் பிக்பாஸ் ரைசா வில்சன்

பாலா இயக்கத்தில் உருவாகி வரும் வர்மா படத்தில் பிக்பாஸ் ரைசா வில்சன் நடனம் ஆடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாலா இயக்கத்தில் உருவாகி வரும் வர்மா படத்தில் பிக்பாஸ் ரைசா வில்சன் நடனம் ஆடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்குபவர் விக்ரம். அவருடைய மகனான துருவ் விக்ரம் 'வர்மா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு என்ட்ரி ஆக உள்ளார். இந்த படத்தினை இயக்குனர் பாலா இயக்கி வருகிறார். கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்த படமான 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் தமிழ் ரீமேக்காக 'வர்மா' படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக வங்காளத்தை சேர்ந்த மேகா சவுத்ரி என்பவர் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு நேபாளத்தில் துவங்கி பல இடங்களில் மும்முரமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது படக்குழு நிறைவு செய்துள்ளது. இதன் பிறகு இந்த படத்தின் பின்னணி வேளைகளில் படக்குழு மும்முரமாக களமிறங்கவுள்ளது. தற்போது இந்த படத்தின் ஒரு பாடலுக்கு பிக்பாஸ் ரைசா வில்சன் நடனமாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இசையமைப்பாளர் ரதன் இசையமைப்பில் ஒரு குத்தாட்ட பாடலுக்கு துருவ் விக்ரமுடன் நடனம் ஆடியுள்ளார். மேலும் இந்த படத்திற்கு தேசிய விருது இயக்குனர் மற்றும் எழுத்தாளரான ராஜு முருகன் வசனங்களை அமைத்துள்ளார்.

துருவ் விக்ரமின் வர்மா படத்தில் பிக்பாஸ் ரைசா வில்சன்