ads

ஜனனியை காப்பாற்ற மொட்டை அடித்த தாடி பாலாஜி

ஜனனியை இந்த வார ஏவிக்சனில் இருந்து காப்பாற்ற தாடி பாலாஜி மொட்ட பாலாஜியாக மாறியுள்ளார்.

ஜனனியை இந்த வார ஏவிக்சனில் இருந்து காப்பாற்ற தாடி பாலாஜி மொட்ட பாலாஜியாக மாறியுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 79வது நாள் நேற்றுடன் நிறைவடைந்தது. கடந்த வார ஏவிக்சனில் டேனியல் வெளியேற்றப்பட்டார். இதன் பிறகு இந்த வார ஏவிக்சனுக்கான நாமினேஷன் நேற்று துவங்கியது. இந்த நாமினேஷனை புது விதமாக இருட்டு அறையில் வைத்து நடத்தினர். இந்த நாமினேஷன் மூலம் ஐஸ்வர்யா முதன் முறையாக மக்களை நேரடியாக சந்திக்க தயாராகியுள்ளார்.

இவருடன் சேர்ந்து மும்தாஜ், ஜனனி, சென்ட்ராயன், விஜயலட்சுமி ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். கடந்த வாரம் நாமினேட் ஆன ஜனனி இந்த வாரமும் நாமினேட் செய்யப்பட்டுள்ளார். தற்போது ரசிகர்களுடைய பார்வை ஐஸ்வர்யா, மும்தாஜ் மற்றும் ஜனனி ஆகியோர் பக்கம் விழுந்துள்ளது. இந்த மூவரில் ஒருவர் இந்த வாரம் வெளியேற்றப்படலாம் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இந்நிலையில் பிக்பாஸ் புது ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ப்ரோமோவில் ஜனனியை இந்த வார ஏவிக்சனில் இருந்து காப்பாற்ற பாலாஜியை மொட்டை அடிக்க வைக்க வேண்டும் என்ற புது டாஸ்க் ஜனனிக்கு கொடுக்கப்பட்டது. இதனை ஏற்று ஜனனியும் பாலாஜியுடன் தனது கோரிக்கையை முன்வைத்தார். இதன் பிறகு பாலாஜியை தனியாக யோசித்து, ஜனனியை தன் மகளாக நினைத்து மொட்டை அடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். சம்மதம் தெரிவித்த பாலாஜியை மும்தாஜ் தான் மொட்டை அடித்துள்ளார். இதன் பிறகு தாடி பாலாஜியாக திரிந்தவர் இனிமேல் மொட்ட பாலாஜியாக அவதி பட போகிறார். 

ஜனனியை காப்பாற்ற மொட்டை அடித்த தாடி பாலாஜி