ads

பாலாஜிக்கு மொட்ட ஐஸ்வர்யாவுக்கு கட்டிங் ரிதிவிகாவுக்கு டேட்டூ

பிக்பாஸ் நிகழ்ச்சியில் புது டாஸ்க் என்ற பெயரில் முடி திருத்துதல், மொட்டை அடித்தல் போன்ற பார்பர் ஷாப் வேலைகளே நடந்து கொண்டிருக்கிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் புது டாஸ்க் என்ற பெயரில் முடி திருத்துதல், மொட்டை அடித்தல் போன்ற பார்பர் ஷாப் வேலைகளே நடந்து கொண்டிருக்கிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சி 80நாட்களை கடந்த நிலையில் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. நேற்று டாஸ்க்குக்காக ஐஸ்வர்யா சொன்ன பொய் போட்டியாளர்களை கோபப்படுத்தியது. தற்போது நாமினேஷனுக்கு தேர்வாகியுள்ளவர்களை காப்பாற்ற புது டாஸ்க் கொடுத்து வருகின்றனர். மற்றவர்களை சமாதானப்படுத்தி ஹவுஸ் மேட்சுக்கு மொட்டை அடித்தல், முடி திருத்துதல், டேட்டூ குத்துதல் போன்றவற்றை பிக்பாஸ் நினைத்ததை சாதித்து வருகின்றனர்.

இந்த டாஸ்க்கில் பாலாஜி, ரித்விகா, ஐஸ்வர்யா, சென்றாயன் போன்ற நான்கு பேருமே மற்றவர்களை காப்பாற்ற நாங்கள் இதை செய்ய தாயார் என துணிந்து விட்டனர். இதன் விளைவாக தாடி பாலாஜி, மொட்ட பாலாஜியாகவும் மாறியுள்ளார். ஐஸ்வர்யா தனது நீண்ட முடியை கட் செய்து பேபி கட்டிங் ஸ்டைலுக்கு மாறியுள்ளார். ரித்விகா பிக்பாஸ் கண்ணை டேட்டூவாக தனது கையில் குத்தியுள்ளார். இந்த டாஸ்க் மூலம் பார்த்தல் சொன்ன டாஸ்க்கிற்கு மறுப்பு தெரிவிக்காமல் அனைவருமே செய்துள்ளனர்.

இதனால் ஐஸ்வர்யா, சென்ட்ராயன், ஜனனி, விஜயலட்சுமி ஆகியோர் நாமினேஷனில் இருந்து விளக்க படுவார்களா என்பது ரசிகர்களின் கேள்வியாக உள்ளது. அப்படி இவர்கள் விலகினால் மும்தாஜ் மட்டுமே மீதமுள்ளார். அவருடைய கதி என்னவென்று தெரியவில்லை, அவருக்கு என்ன டாஸ்க் வரப்போகிறது என்பதும் தெரியாமல் உள்ளது. இதன் மூலம் மும்தாஜ் இந்த வார ஏவிக்சன் மூலம் வெளியேற்றப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

பாலாஜிக்கு மொட்ட ஐஸ்வர்யாவுக்கு கட்டிங் ரிதிவிகாவுக்கு டேட்டூ