பாலிவுட் ஸ்டாரான சல்மான் கான் தற்போதுவரை சந்தித்த பிரச்சனைகள்

       பதிவு : Apr 06, 2018 14:22 IST    
நடிகர் சல்மான் கான் ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு பிரச்சனையில் சிக்கி கொள்கிறார். நடிகர் சல்மான் கான் ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு பிரச்சனையில் சிக்கி கொள்கிறார்.

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகர்களுள் ஒருவரான சல்மான் கான், நடிகர் மற்றும் தயாரிப்பாளராக மட்டுமல்லாமல் தொகுப்பாளராக 10க டும் (10 Ka Dum), பிக்பாஸ் (Bigg Boss), 8th 9th ஸ்டார் கில்ட் அவார்ட்ஸ் (Star Guild Awards) போன்ற நிகழ்ச்சிகளில் பணியாற்றியுள்ளார். இவர் திரையுலகிற்கு 1988-ஆம் ஆண்டு 'Biwi Ho To Aisi' என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இதனை தொடர்ந்து இவர் தற்போது வரை 109 படங்களில் நடித்துள்ளார். இவர் திரைத்துறையில் அறிமுகமாகி 30 வருடங்கள் ஆகிவிட்டது.

இவருடைய நடிப்பில் இறுதியாக 'Tiger Zinda Hai' என்ற படம் வெளியாகி உலகம் முழுவதும் நல்ல வசூல் படைத்தது வந்தது. இவருக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். திரைத்துறையில் தனது நடிப்பின் மூலம் பல விருதுகளை வென்று வரும் இவர் சொந்த வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்தித்து வரும் இவர் சில வழக்குகளில் சிறை தண்டனையும் அடைந்துள்ளார்.

 

இவர் 1998-ஆம் ஆண்டு உரிமமில்லாத அமெரிக்காவில் தயாரித்த துப்பாக்கியை உபயோகப்படுத்தி 'பிளாக் பக்' எனப்படும் அரியவகை மானை வேட்டையாடியதற்காக அவர் மீது இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பு தற்போது வழங்கப்பட்டு 5 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ளார். இவர் மும்பையில் கடந்த 2002-ஆம் ஆண்டு செப்டம்பர் 28-ஆம் தேதி, அலட்சியமாகவும், வேகமாகவும் வாகனம் ஓட்டி வந்ததால், நடைபாதையில் தூங்கியவர்கள் மீது இவருடைய ஏறியது.

இந்த விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார் மற்றும் மூன்று பேர் படுகாயமடைந்தனர். இதனால் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். இதன் பிறகு இவரை விசாரணை நீதிமன்றம் 'குற்றவாளி' என அறிவித்தது ஆனால் மும்பை உயர்நீதிமன்றம் 'குற்றவாளி இல்லை' என அறிவித்து விடுதலை செய்தது.

 

மேலும் நடிகை ஐஸ்வர்யா ராய், சல்மான் கானுக்கும் எனக்கும் இடையே உள்ள தொடர்பு முடிந்த பிறகும் தொடர்ந்து தொந்தரவு செய்வதாக சல்மான் கான் மீது குற்றம் சாட்டினார். இதற்கு ஐஸ்வர்யா ராயின் பெற்றோர்களும் கடும் எதிர்ப்புகளை பதிவு செய்திருந்தனர். இது போன்று ஒவ்வொரு வருடமும் சல்மான் கான் ஏதாவது ஒரு வழக்கில் சிக்கி கொள்கிறார். தற்போது பிளாக் பக் மானை வேட்டையாடியதற்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்துள்ளது. இதற்கு சல்மான் கான் ஜாமீன் கேட்டுள்ளார். நாள் இதன் தீர்ப்பு இன்று வழங்க முடியாது. நாளை வழங்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 


பாலிவுட் ஸ்டாரான சல்மான் கான் தற்போதுவரை சந்தித்த பிரச்சனைகள்


செய்தியாளர் பற்றி

விக்னேஷ் சுற்றுப்புற சுகாதாரம் மற்றும் கல்வி சார்ந்த செய்திகளை பெருமளவு எழுதி வருகிறார். இவர் தனது செய்திகளில் கற்பனை திறனையும், புது புது தகவல்களையும் வெளிப்படுத்தி வருகிறார். இவர் செய்திகளை எழுதுவதில் வல்லவர். தனது திறமையால் சிறு தகவல்களை வைத்து அதன் மூலம் நம்மால் ஈன்ற அளவுக்கு தனது முயற்சிகளை வெளிப்படுத்துவார். அனைவரிடத்திலும் வெளிப்படையாக பழக கூடியவர். மற்றவர்களிடமிருந்து புது நுணுக்கங்களையும் நுட்பத்தையும் சேகரித்து தன்னுடைய அறிவை வளர்த்து கொள்வார். இவர் தான் சேகரிக்கும் தகவல்களை மிகவும் எளிமையான முறையில் மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் சிறப்பானதாக விளங்குகிறார். ... மேலும் படிக்க

Vignesh writer and reporter

விக்னேஷ்செய்தியாளர்