ads

ஆறுச்சாமி ரீஎன்ட்ரி வெளியானது சாமி ஸ்கொயரின் மோஷன் போஸ்டர்

சீயான் விக்ரமின் சாமி ஸ்கொயர் படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ட்ரைலர் வரும் மே 26ஆம் தேதி வெளியாகவுள்ளது.

சீயான் விக்ரமின் சாமி ஸ்கொயர் படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ட்ரைலர் வரும் மே 26ஆம் தேதி வெளியாகவுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விக்ரம், 52 வயதை கடந்தும் 25 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். இவருடைய நடிப்பில் தற்போது சாமி 2 மற்றும் துருவநட்சத்திரம் போன்ற படங்கள் உருவாகி வருகிறது. இதில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் தற்போது விக்ரம் காவல் அதிகாரியாக நடித்து வரும் 'சாமி ஸ்கொயர்' படம் 2003இல் வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்த சாமி படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகி வருகிறது. நடிகர் விக்ரம் ஏற்கனவே இயக்குனர் ஹரியுடன் இணைந்து அருள் மற்றும் சாமி போன்ற வெற்றி படங்களை தந்துள்ள நிலையில் தற்போது மீண்டும் மூன்றாவது முறையாக சாமி 2 படத்தின் மூலம் இணைந்துள்ளனர்.

பொதுவாக இயக்குனர் ஹரியின் படங்களில், கதைக்கும், சண்டை காட்சிகளுக்கும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அந்த வகையில் 'சாமி 2' படத்தின் எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் ரசிகர்களிடம் அதிகரித்து வருகிறது. சாமி படத்தின் தொடர்ச்சியான கதையாக உருவாகி வரும் இந்த படத்தில் த்ரிஷாவுக்கு பதிலாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். முதல் பாகத்தில் இறந்த வில்லன் பெருமாள் பிச்சையின் மகனாக பாபி சிம்ஹா வில்லனாக நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் ட்ரைலரை வரும் மே 26-ஆம் தேதியில் வெளியிட உள்ளதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.

ஆறுச்சாமி ரீஎன்ட்ரி வெளியானது சாமி ஸ்கொயரின் மோஷன் போஸ்டர்