இயக்குனர் கார்த்திக் நரேனின் புது பட தகவல்

       பதிவு : Jan 10, 2018 18:28 IST    
director karthich naren new film updates director karthich naren new film updates

துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் கார்த்திக் நரேன் இயக்குனராக அறிமுகமானார். இந்த படத்தில் மாபெரும் வெற்றி பெற்றதோடு சிறந்த இயக்குனர் என்ற விருதினையும் பெற்றார். இதனை தொடர்ந்து அதிரடி த்ரில்லரான 'நரகாசூரன்' படத்தினை இயக்கி வருகிறார். இப்படத்தில் அரவிந்த் சாமி, சந்தீப் கிஷன், மலையாள நடிகர் இந்திரஜித், ஸ்ரேயா, மிசையமுறுக்கு நாயகி ஆத்மிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார். கார்த்திக் நரேனின் சொந்த ஊரான ஊட்டியில் படத்தின் அனைத்து காட்சிகளையும் படமாக்கப்பட்டிருக்கிறது. தற்பொழுது படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடெக்சன் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகியுள்ள இப்படத்தினை 
இயக்குனர் கவுதம் மேனனுக்கு சொந்தமான ‘ஒன்றாக எண்டர்டெயின்மெண்ட்’தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் அவரே தயாரித்துள்ளார். இந்த படத்தில் 'மாயா' புகழ் ரான் எத்தன் யோஷான் இசையமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளார். இவருடன் இணைந்து சுஜித் சாரங் ஒளிப்பதிவு பணியை மேற்கொண்டுள்ளார். கடந்த நாட்களில் வெளிவந்த படத்தின் போஸ்டர், டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது. மேலும் இப்படத்தினை வருகிற பிப்ரவரி மாதத்தில் திரையிட உள்ளனர். இதனை தொடர்ந்து இயக்குனர் கார்த்திக் நரேன் மூன்றாவது ஒரு புது படத்தினை இயக்கவிருப்பதாக தகவல் வந்துள்ளது. இந்த தகவலை கார்த்திக் நரேன் அவரது ட்விட்டரில் பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.   
 

 


இயக்குனர் கார்த்திக் நரேனின் புது பட தகவல்


செய்தியாளர் பற்றி

அடிப்படையில் தேவி ஒரு ஓவியர் மற்றும் பயணங்களை மிகவும் ரசிப்பவர். இயற்கையின் மீதும் தனது எழுத்து திறமையின் மீதும் சிறந்த ஆர்வம் கொண்டவர். இவர் இயற்கை வளங்களையும், மலை சார்ந்த இடங்களையும் நிறையவே நேசிக்கிறார். இவர் தான் சேகரித்த பல்வேறு தகவல்களையும், எண்ணங்களையும் மக்களுக்கு கொண்டு சேர்ப்பவர். ... மேலும் படிக்க

Yasodha senior editor and writer

யசோதாமூத்த எழுத்தாளர்