தேசப்பற்று பாடலுக்காக ஒரு கோடி செலவில் செட் அமைத்த பூமராங் படக்குழு

       பதிவு : Mar 13, 2018 11:54 IST    
கலை இயக்குனர் ஷிவா யாதவ் தேச பற்று பாடலுக்காக ஒரு கோடி செலவில் செட் அமைத்துள்ளார். கலை இயக்குனர் ஷிவா யாதவ் தேச பற்று பாடலுக்காக ஒரு கோடி செலவில் செட் அமைத்துள்ளார்.

வந்தான் வென்றான், சேட்டை, இவன் தந்திரன் போன்ற படங்களை இயக்கிய ஆர் கண்ணன் இயக்கத்தில் தற்போது பிரமாண்டமாக உருவாகி வரும் படம் 'பூமராங்'. இந்த படத்தில் நாயகனாக நடிகர் அதர்வா நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து அதர்வா நடிப்பில் செம போதை ஆகாத, இமைக்கா நொடிகள், ஒத்தைக்கு ஒத்த, ருக்குமணி வண்டி வருது போன்ற படங்கள் உருவாகி வருகிறது.

இயக்குனர் ஆர் கண்ணன், அதர்வா முதன் முறையாக இணைந்துள்ள இந்த படத்தில் நாயகியாக நடிகை மேகா ஆகாஷ் நடித்து வருகிறார். தற்போது உருவாகி வரும் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் மூலம் பிரபலமான இவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் அடுத்தடுத்து குவிந்து வருகிறது. இந்த படத்தை இயக்குனர் ஆர் கண்ணன் தனது மசாலா பிக்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார்.

 

இந்த படத்தில் 'ஐ' படத்தில் வில்லனாக நடித்த உபன் படேல் நடித்து வருகிறார். இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரம் மிகவும் வலுவானதாக உருவாகி வருகிறது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ரதன் இசையமைக்க, பாடலாசிரியர் விவேக் பாடல் வரிகளை எழுதியுள்ளார். இந்த படத்தில் அழுத்தமான சமூக கருத்தை பதிவு செய்துள்ளனர்.

இதற்காக இந்த படத்தில் தேச பற்று சார்ந்த ஒரு பாடல் இடம்பெறுகிறது. இதற்காக கலை இயக்குனரான ஷிவா யாதவ் சுமார் ஒரு கோடி செலவில் பிரமாண்டமாக செட் அமைத்துள்ளனர். இது குறித்து இயக்குனர் ஆர் கண்ணன் கூறும்போது "வலுவான சமூக கருத்துடன் ஆக்சன் படமாக உருவாகி வரும் படம் தான் 'பூமராங்'. இந்த படத்தில் தேசப்பற்று பாடல் ஒன்று இடம் பெறுகிறது. இந்த பாடலுக்காக முற்றிலும் மாறுபட்ட செட்டை பிரமாண்ட பொருட்செலவில் உருவாக்கியுள்ளோம்.

 

எனது கனவை மிகவும் அழகாக புரிந்து கொண்டு இசையமைப்பாளர் ரதன் மற்றும் பாடலாசிரியர் விவேக் ஆகியோர் அருமையான பாடல் வரிகளை உருவாகியுள்ளனர். ஷிவா யாதவின் பிரமாண்ட அரங்க அமைப்பும், நடன இயக்குனரான பிருந்தாவின் நடன இயக்கத்திலும் இந்த பாடல் இன்னும் சிறப்பாகியுள்ளது.

நமது சினிமா துறையின் சிறந்த 100 நடன கலைஞர்களும், சுமார் 2000 ஜூனியர் ஆர்டிஸ்டுகளும் இந்த பாடலில் இடம்பெறுகின்றனர். மேலும் இந்த படத்தை வலுவூட்டும் விதமாக 'மேயாத மான்' படத்தில் பிரபலமான இந்துஜா முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார்.

 

இந்த படத்திற்கு முக்கியமான கதாபாத்திரம் அது. இந்த கதாபாத்திரத்திற்கு நாயகிகள் தேர்வு நடைபெறும் போது படக்குழு அனைவரின் தேர்வும் இந்துஜா தான். இதற்கு காரணம் தனது முதல் படத்தில் அவர் வெளிப்படுத்திய அசத்தலான நடிப்பு திறமை." என்று அவர் தெரிவித்துள்ளார்.


தேசப்பற்று பாடலுக்காக ஒரு கோடி செலவில் செட் அமைத்த பூமராங் படக்குழு


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்