ads

இயக்குனர் சமுத்திரக்கனியின் நாடோடிகள் 2 பட பூஜை

director samuthirakani new movie nadodigal 2 movie poojai

director samuthirakani new movie nadodigal 2 movie poojai

நடிகர் மற்றும் இயக்குனரான சமுத்திரக்கனி எழுத்து மற்றும் இயக்கத்தில் 2003-ஆம் ஆண்டு இயக்குனர் வெங்கட் பிரபு நடிப்பில் 'உன்னை சரணடைந்தேன்' படம் வெளியானது. இந்த படம் இவருடைய இயக்கத்தில் வெளிவந்த முதல் படமாகும். இந்த படத்திற்கு தமிழ்நாட்டின் சிறந்த திரைக்கதை எழுத்தாளருக்கான விருது கிடைத்தது. இதனை தொடர்ந்து இவர் நெறஞ்ச மனசு, நாடோடிகள், போராளி, நிமிர்ந்து நில், அப்பா, தொண்டன் போன்ற படங்களை இயக்கியுள்ளார். இதில் 2009-ஆம் ஆண்டு நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான சசிகுமார் நடிப்பில் வெளியான 'நாடோடிகள்' படம் திருப்பு முனையாக அமைந்தது.

இந்த படம் நண்பர்களின் நட்பையும் காதலையும் மையப்படுத்தி அமைந்ததால் ஏராளமான ரசிகர்களிடையே வெகுவான வரவேற்பினை பெற்றது. இந்த படத்தில் சசிகுமார், விஜய் வசந்த், பரணி, அனன்யா, அபிநயா, கஞ்சா கருப்பு ஆகியோரது நடிப்புகள் சிறப்பு வாய்ந்ததாக அமைந்தது. இந்த படத்தில் நடிகை அபிநயா (வாய் பேசாதவர் மற்றும் காது கேளாதவர்) என்பவரை இந்த படத்தில் இயக்குனர் சமுத்திரக்கனி திரையுலகிற்கு அறிமுகபடுத்தி பிரபலமாக்கினார். மேலும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சுந்தர் சி பாபு இசை பக்கபலமாக அமைந்தது. இந்த படம் விஜய் அவார்ட்ஸின் ஆண்டின் பிடித்த இயக்குனர் (Vijay Award for Favourite Director) விருதை வென்றது.

மேலும் இந்த படம் பிலிம் பேர் மற்றும் விஜய் அவார்ட்ஸின் சிறந்த இயக்குனர், கதை எழுத்தாளர் போன்ற விருதுகளுக்காக பரிந்துரைக்கப்பட்டது. இந்த படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து 'நாடோடிகள்' இரண்டாம் பாகத்தை எடுக்க படக்குழு முடிவு செய்தது. இதனை அடுத்து தற்போது இந்த படத்தில் நடிக்கும் நடிகர் மற்றும் நடிகைகளின் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. 'நாடோடிகள் 2' படத்தில் சசிகுமார், சமுத்திரக்கனி ஆகியோர் நாயகர்களாக நடிக்க உள்ளனர். இவர்களுக்கு ஜோடியாக நடிகை அஞ்சலி மற்றும் அதுல்யா ரவி நடிக்க உள்ளனர். இவர்களுடன் இணைந்து சூப்பர் சுப்பராயன், எம்எஸ் பாஸ்கர், பரணி, துளசி, ஸ்ரீ ரஞ்சனி, நமோ நாராயணன், ஞான சம்பந்தம் உள்ளிட்ட பலர் இந்த படத்தின் மூலம் இணைந்துள்ளனர். இந்த படத்தை இன்ஸ்பைர் என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளது 

இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க ஏகாம்பரம் ஒளிப்பதிவு பணியை மேற்கொள்கிறார். ஜாக்கி கலை இயக்குனராகவும், ரமேஷ் எடிட்டிங் பணிகளையும், திலீப் சுப்பராயன் சண்டை பயிற்சியையும் மேற்கொள்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் மதுரையின் சுற்றுவட்டாரத்தில் நடைபெற உள்ளது. தற்போது இந்த படத்தின் பூஜை நடந்துள்ளது. இதற்கான புகைப்படங்களை படக்குழு சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளது.

director samuthirakani new movie nadodigal 2 movie poojaidirector samuthirakani new movie nadodigal 2 movie poojai