ads

பூஜையுடன் துவங்கிய சமுத்திரக்கனியின் புது பட ஷூட்டிங்

sangathalaivan shooting start

sangathalaivan shooting start

தமிழ் திரையுலகில் சிறந்த இயக்குனர் மற்றும் நடிகராக வளம் வரும் சமுத்திரக்கனி தற்பொழுது பல படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் கொளஞ்சி, ஏமாளி, ஆண் தேவதை, பேரன்பு, மதுர வீரன்,காலா போன்ற பல படங்கள் உருவாகிவருகிறது. இந்த படங்களை தொடர்ந்து மேலும் ஒரு புது படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வந்துள்ளது. இந்த புது படத்தினை இயக்குனர் மணிமாறன் இயக்கவுள்ளார். இவர் சித்தார்த் நடிப்பில் வெளிவந்த 'உதயம் என்எச்4' படத்தின் மூலம் இயக்குனராக திரையுலகில் அறிமுகமானார். அதன் பின்னர் 'பிக் பாஸ்' ஹரிஸ் கல்யாண் நடிப்பில் வெளிவந்த 'பொறியாளன்' படத்தில் எழுத்தாளராக பணிபுரிந்துள்ளார். இதற்கு அடுத்த படியாக ஜெய்யின் 'புகழ்'  படத்தினை இயக்கியிருந்தார். 

மணிமாறன் இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிக்கவுள்ள இப்படத்திற்கு சங்கத்தலைவன் என்று தலைப்பினை வைத்து நேற்று படத்தின் படப்பிடிப்பிற்காக சிறப்பு பூஜை நடைபெற்றதோடு படத்தின் ஷூட்டிங்கும் துவங்கப்பட்டது. இந்த படம் கைத்தறி தொழிலுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் உருவாகவிருக்கிறது. மேலும் இப்படத்தினை இயக்குனர் வெற்றிமாறன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி’ தயாரிப்பு நிறுவனம் சார்பில் அவரே தயாரிக்க உள்ளார். சமுத்திரக்கனிக்கு ஜோடியாக பிரபல தொகுப்பாளினி ரம்யா இணைந்துள்ளார். இவர்களுடன் இணைந்து கருணாஸ் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார்.   

இந்நிலையில் படத்தின் பூஜை துவங்கியிருப்பதை உறுதிப்படுத்தும் விதமாக ரம்யா அவரது டிவிட்டரில் பூஜை நடைபெறும் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர் போன்றவை விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.      

பூஜையுடன் துவங்கிய சமுத்திரக்கனியின் புது பட ஷூட்டிங்