இயக்குனர் சமுத்திரக்கனியின் புது பட தகவல்

       பதிவு : Jan 21, 2018 10:18 IST    
samuthirakani new film title samuthirakani new film title

'உன்னை சரணடைந்தேன்' படத்தின் மூலம் இயக்குனராக திரையுலகில் அறிமுகமானவர்  சமுத்திரக்கனி. இந்த படத்தினை தொடர்ந்து நாடோடிகள், போராளி, நிமிர்ந்து நில், அப்பா, தொண்டன் போன்ற வெற்றி படங்களை கொடுத்துள்ளார். இவர் பெரும்பாலும் சமுதாயத்தின் அடிப்படையை மையமாக கொண்டு பல படங்களை இயக்கியுள்ளார். மேலும் இவர் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளிலும் இயக்குனராக பணிபுரிந்ததோடு பல படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினையும் பெற்றுள்ளார்.    

சமுத்திரக்கனி தற்பொழுது கொளஞ்சி, ஏமாளி, ஆண் தேவதை, பேரன்பு, மதுர வீரன், காலா, சங்கத்தலைவன் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதில் சங்கத்தலைவன் படத்தினை இயக்குனர் மணிமாறன் இயக்கிவருகிறார். இவர் சித்தார்த் நடிப்பில் வெளிவந்த ‘உதயம் என்எச்4’ படத்தின் மூலம் முதல் முறையாக இயக்குனராக அறிமுகனமர். அதன் பிறகு ஜெய்யின் 'புகழ்' படத்தினை இயக்கியிருந்தார். தற்பொழுது சமுத்திரக்கனி நடிப்பில் சங்கத்தலைவன் படத்தின் மூலம் மூன்றாவது முறையாக இயக்குனர் பணியை மணிமாறன் மேற்கொள்ளவுள்ளார். 

 

இந்த படம் சேலம், ஈரோடு, திருப்பூர் போன்ற மாவட்டங்களில் இன்றளவும் முக்கிய தொழிலாக கருதப்படும் விசைத்தறித்தொழிலையும் இந்த தொழில் மூலம் தொழிலாளர்களுக்கு ஏற்படும் பிரச்சனையையும் எடுத்துரைக்கும் பாரதிநாதன் என்பவரின் ‘தறியுடன்’ என்ற நூலை அடிப்படையாக கொண்டு சமுத்திரக்கனியின் இந்த புது படம் உருவாகவுள்ளது. 'கிராஸ்ரூட் ஃபிலிம்' தயாரிப்பு நிறுவனம் சார்பில் இயக்குனர் வெற்றிமாறன் தயாரிக்கும் இப்படத்தில் கைத்தறி தொழிலாளியாக சமுத்திரக்கனி நடிக்கவுள்ளார். இவருக்கு ஜோடியாக பிரபல சின்னத்திரை டிவி தொகுப்பாளர் ரம்யா நடிக்கவுள்ளார். இவர் மொழி, மங்காத்தா, வனமகன், ஓ காதல் கண்மணி போன்ற பங்களில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். 


இயக்குனர் சமுத்திரக்கனியின் புது பட தகவல்


செய்தியாளர் பற்றி

விவசாயம் சார்ந்த அனைத்து தொழில்களிலும் அதிகளவு ஆர்வம் உடையவர். தற்பொழுது மக்களிடையே நிலவி வரும் சமூக வலைதளம், சினிமா தொடர் போன்றவற்றில் கவனம் செலுத்துபவர். அரசியல் சார்ந்த செய்திகளை அடியோடு வெறுப்பவர். சில நேரங்களில் ஓவியம் வரைதல், சிறந்த நாவல்களை படித்தல் போன்றவற்றில் கவனம் செலுத்துபவர். கடவுள் நம்பிக்கை உடையவர். நாளுக்கு நாள் வெளிவரும் புது புது சினிமா (திரைப்படம் ) சார்ந்த செய்திகளை மக்களிடையே கொண்டு சேர்பவர். ... மேலும் படிக்க

ratiga

ராதிகாஎழுத்தாளர்