ads

பிப்ரவரி பட்டியலில் சமுத்திரக்கனியின் ஏமாளி

samuthirakanis yemaali release from february

samuthirakanis yemaali release from february

சமூகத்தை சார்ந்த பல படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வரும் இயக்குனர், நடிகர் சமுத்திரக்கனி தற்பொழுது 'ஏமாளி' படத்தில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் இதுவரை வெளிவந்த படங்களை காட்டிலும் 'ஏமாளி' படத்தில் புது வித கெட்டப்பில் களமிறங்கியதோடு நான்கு மாறுபட்ட தோற்றங்களில் நடித்திருப்பதாக படக்குழு தகவலை வெளியிட்டுள்ளது. மேலும் படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரில் சமுத்திரக்கனியின் தோற்றத்தை பார்த்த ரசிகர்கள் மத்தியில் படத்திற்கான வரவேற்பும், எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளனர்.  

லதா ப்ரொடக்சன் தயாரிப்பில் உருவாக்கி வரும் இப்படத்தில் சாம் ஜோன்ஸ், அதுல்யா ரவி, சிங்கம் புலி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இந்த படத்தினை வி.சட்.துரை இயக்குகிறார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு படத்தின் போஸ்டர், டீசர், ட்ரைலர், இசை போன்றவை வெளிவந்து ரசிகர்கள்  மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதற்கு அடுத்த படியாக படத்தினை வருகிற பிப்ரவரி மாதத்தில் வெளியிடுவதாக சமுத்திரக்கனி அவரது ட்விட்டரில் பதிவு செய்து தகவலை வெளியிட்டுள்ளார். 

பிப்ரவரி பட்டியலில் சமுத்திரக்கனியின் ஏமாளி