சங்க தலைவரானார் சமுத்திரக்கனி

       பதிவு : Nov 01, 2017 16:50 IST    
சங்க தலைவரானார் சமுத்திரக்கனி

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் இயக்குனர்களின் ஒருவராக சமுத்திர கனியின் சில படங்கள் நல்ல வரவேற்பினை தந்துள்ளது. அவரின் படங்கள் அனைத்தும் சமுதாயத்தின் அடிப்படைக்கு ஏற்ற வாரே அமைந்திருக்கிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் கதாநாயகனாகவும் குணச்சித்ர கதாபாத்திரத்திலும் நடித்து நற்பெயர் பெற்றுள்ளார். 

உதயம், பொறியாளன், புகழ் போன்ற படங்களை இயக்கிய மணிமாறன் இப்படத்தினை இயக்க இருக்கிறார். சங்க தலைவன் படத்தின் டைட்டிலுக்கு ஏற்றவாறே சமுத்திரக்கனி இப்படத்தில் சங்க தலைவர் கதாபாத்திரத்தில் நடிக்கயிருக்கிறார். 

 

வெற்றிமாறன் தயாரிக்கும் இந்த படத்தில் வேல்ராஜ் ஒளிப்பதிவு மற்றும் வெங்கடேசன் எடிட்டிங் பணிக்காக இணைந்துள்ளனர். இனியா மற்றும் கருணாஸ் இவர்களுடன் இணைந்து இன்னும் சிலர்  நடிக்க இருக்கின்றனர். சேலம், ஈரோடு, திருப்பூர் போன்ற இடங்களில் படப்பிடிப்புகள் எடுக்கயிருக்கின்றனர்.                


சங்க தலைவரானார் சமுத்திரக்கனி


செய்தியாளர் பற்றி

விவசாயம் சார்ந்த அனைத்து தொழில்களிலும் அதிகளவு ஆர்வம் உடையவர். தற்பொழுது மக்களிடையே நிலவி வரும் சமூக வலைதளம், சினிமா தொடர் போன்றவற்றில் கவனம் செலுத்துபவர். அரசியல் சார்ந்த செய்திகளை அடியோடு வெறுப்பவர். சில நேரங்களில் ஓவியம் வரைதல், சிறந்த நாவல்களை படித்தல் போன்றவற்றில் கவனம் செலுத்துபவர். கடவுள் நம்பிக்கை உடையவர். நாளுக்கு நாள் வெளிவரும் புது புது சினிமா (திரைப்படம் ) சார்ந்த செய்திகளை மக்களிடையே கொண்டு சேர்பவர். ... மேலும் படிக்க

ratiga

ராதிகாஎழுத்தாளர்