இந்தியன் 2 ப்ரோமோஷனுக்கு சங்கரின் புதிய சாகசம்

       பதிவு : Jan 27, 2018 11:26 IST    
shankar indian 2 flying baloon in taiwan shankar indian 2 flying baloon in taiwan

சங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் '2.0' படத்தின் எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. எந்திரன் படத்தினை போன்று ரோபோக்களை மையமாக வைத்து அதிக பொருட்செலவில் லைக்கா ப்ரொடெக்சன் தயாரித்துள்ள இப்படத்தில் தெலுங்கு நடிகர் அக்க்ஷய்  குமார் 12 மாறுபட்ட தோற்றத்தில் நடித்து ரசிகர்களை மிரவைக்கும் பல காட்சியில் ஈடுபட்டுள்ளாராம். மேலும் இப்படத்தில் எமி ஜாக்சன் முக்கிய வேடத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தினை தொடர்ந்து இயக்குனர் சங்கர் 'இந்தியன் 2' படத்தினை இயக்கவுள்ளார்.   

இந்த படத்தின் படப்பிடிப்புகள் இன்னும் சில நாட்களில் துவங்கவிருக்கும் இந்நிலையில் படத்தின் ப்ரோமோஷனுக்காக இயக்குனர் சங்கர் பல புதுவித பணிகளை மேற்கொண்டு வருகிறார். இதில் 2.0 படத்தின் வரவேற்புகளுக்கும் படத்தின் எதிர்ப்பார்ப்புகளை அதிகப்படுத்துவதற்கும் அமேரிக்கா, துபாய், பொள்ளாச்சி போன்ற நகரங்களில் பெரிய பலூனில் 2.0 மற்றும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை அச்சடித்து வானில் பறக்கவிட்டது போன்று 'இந்தியன் 2' படத்தின் பெயரை ஒரு பலூனில் எழுதி தைவான் நாட்டில் ஒரு சாகசத்தை இயக்குனர் சங்கர் மேற்கொண்டுள்ளார். இந்த சாகச வீடியோவை சங்கர் அவரது ட்விட்டரில் பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.  

 

தற்பொழுது இந்த வீடியோ வலைத்தளத்தில் பரவி வருவதோடு ரசிகர்கள் மத்தியில் படத்தின்  மீதான எதிர்பார்ப்பும் அதிகப்படுத்தி வருகிறது. இந்தியன் படத்தின் வெற்றியை தொடர்ந்து 'இந்தியன் 2' படத்தினை உருவாகவிருக்கும் சங்கரின் இப்படம் இன்றைய கால சமுதாயத்திற்கு ஏற்றவாறு பல அதிரடி கட்சிகளுடன் கூடிய வசனங்கள் இடம் பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.    


இந்தியன் 2 ப்ரோமோஷனுக்கு சங்கரின் புதிய சாகசம்


செய்தியாளர் பற்றி

விவசாயம் சார்ந்த அனைத்து தொழில்களிலும் அதிகளவு ஆர்வம் உடையவர். தற்பொழுது மக்களிடையே நிலவி வரும் சமூக வலைதளம், சினிமா தொடர் போன்றவற்றில் கவனம் செலுத்துபவர். அரசியல் சார்ந்த செய்திகளை அடியோடு வெறுப்பவர். சில நேரங்களில் ஓவியம் வரைதல், சிறந்த நாவல்களை படித்தல் போன்றவற்றில் கவனம் செலுத்துபவர். கடவுள் நம்பிக்கை உடையவர். நாளுக்கு நாள் வெளிவரும் புது புது சினிமா (திரைப்படம் ) சார்ந்த செய்திகளை மக்களிடையே கொண்டு சேர்பவர். ... மேலும் படிக்க

ratiga

ராதிகாஎழுத்தாளர்