திறமையான விளையாட்டு வீரர்களை திரையுலகிற்கு அறிமுகப்படுத்தும் இயக்குனர் சுசீந்திரனின் அடுத்த பிரமாண்டம்

       பதிவு : Mar 17, 2018 11:03 IST    
புட்பால் விளையாட்டை மையமாக வைத்து உருவாகவுள்ள சுசீந்திரனின் புதிய படம். புட்பால் விளையாட்டை மையமாக வைத்து உருவாகவுள்ள சுசீந்திரனின் புதிய படம்.

இயக்குனரான சுசீந்திரன் தற்போது நடிப்பில் களமிறங்கியுள்ளார். இவர் தற்போது நடித்து வரும் படம் 'சுட்டுப்பிடிக்க உத்தரவு'. இந்த படத்தில் நடிகர் விக்ராந்துடன் இணைந்து நடித்து வருகிறார். இவருடைய இயக்கத்தில் வெளியான முதல் படம் 'வெண்ணிலா கபடி குழு'. தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றான கபடியை மையமாக கொண்ட இந்த படம் ரசிகர்கள் மனதில் தற்போது வரை நீங்கா இடம் பிடித்துள்ளது.

இவருடைய படங்களுக்கு எப்போதும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருக்கும். அதன்படி இவருடைய இயக்கத்தில் வெளியான நான் மகான் அல்ல, பாண்டிய நாடு, ஆதலால் காதல் செய்வீர், ஜீவா, பாயும் புலி போன்ற படங்கள் ரசிகர்களின் நல்ல வரவேற்பை பெற்றது. இவருடைய இயக்கத்தில் இறுதியாக வெளியான படம் 'நெஞ்சில் துணிவிருந்தால்'. இதனை தொடர்ந்து இவர் 'ஏஞ்சலினா' என்ற படத்தை இயக்கி வருகிறார்.

 

புது முகங்களை வைத்து உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாக தற்போது சுசீந்திரன் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து இவருடைய இயக்கத்தில் உருவாகவுள்ள அடுத்த படத்திற்கான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார். இந்த படம் புட்பாலை மையமாக வைத்து உருவாகவுள்ளது.

இவருடைய இயக்கத்தில் கபடி, கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளை சார்ந்த படங்கள் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் அடுத்ததாக உலகம் முழுவதும் புகழ் பெற்ற புட்பால் (Football) விளையாட்டை கையில் எடுத்துள்ளார். இதற்காக சிறந்த வீரர்களை தேர்வு செய்து வருகிறார். இந்த படமும் புது முக விளையாட்டு வீரர்களின் நடிப்பில் உருவாக உள்ளது.

 


திறமையான விளையாட்டு வீரர்களை திரையுலகிற்கு அறிமுகப்படுத்தும் இயக்குனர் சுசீந்திரனின் அடுத்த பிரமாண்டம்


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்