ads

இயக்குனர் சுசீந்திரனின் அடுத்த பட தகவல்

director suseenthiran next movie project

director suseenthiran next movie project

'வெண்ணிலா கபடி குழு' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான சுசீந்திரன் பல வெற்றி படங்களை தற்போதுவரை கொடுத்துள்ளார். இவரின் அனைத்து படங்களும் யதார்த்தமாகவும், ரசிகர்களை கவரும் வகையில் அமைவது இவரது ஸ்பெஷல் என்று சொல்லலாம். இவரின் இயக்கத்தில் தற்போது வெளிவந்த 'நெஞ்சில் துணிவிருந்தால்' ரசிகர்கள் மற்றும் விமர்சனங்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது. இதனை தொடர்ந்து 'ஏஞ்சலினா' படத்தினை இயக்கிவருகிறார்.     

இந்நிலையில் அவரின் அடுத்த பட அறிவிப்புகள் வெளிவர உள்ளது. இது வரை திரைப்படங்கள் மட்டும் எடுத்து கொண்டிருந்த சுசீந்திரன் முதல் முதலாக படங்களில் நடிக்க இருக்கிறார். இந்த தகவல் சுசியின் ரசிகர்களுக்கு மிக பெரிய விருந்தாக அமையவுள்ளது. இவருடன் இணைந்தது துப்பறிவாளன் இயக்குனர் மிஸ்கின், விக்ராந்த் நடிக்கவுள்ளனர். கல்பதரு பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ள இப்படத்திற்கு டைட்டில் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியிடுவதாக சுசீந்திரன் அவரது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். 

சுசீந்திரன் நடிக்கவிருக்கும் படத்தின் இயக்குனர், டைட்டில்  

ஜீவா நடிப்பில் 'போக்கிரி ராஜா', நகுல் நடிப்பில் 'தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும்' படங்களை இயக்கிய ராம்பிரகாஷ் ராயப்பா 'சுட்டுப்பிடிக்க உத்தரவு' என்ற புது படத்தினை இயக்கவிருக்கிறார். இந்த படத்தில் இயக்குனர் சுசீந்திரன், மிஸ்கின், விக்ராந்த் மூவரும் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளனர்.     

இயக்குனர் சுசீந்திரனின் அடுத்த பட தகவல்