இயக்குனர் சுசீந்திரனின் அடுத்த பட தகவல்

       பதிவு : Dec 28, 2017 20:25 IST    
director next movie title director next movie title

தமிழகத்தில் பழனியை சேர்ந்த இயக்குனர் சுசீந்திரன் 2009-இல் வெளியான 'வெண்ணிலா கபடி குழு' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்த படத்தின் மூலம் விஷ்ணு விஷால், அப்புக்குட்டி, பரோட்டா சூரி, விஜய் சேதுபதி ஆகியோர் அறிமுகமாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றனர். இந்த படத்தை தெலுங்கில் 'பீம்லி கபடி ஜட்டு' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு 2010-ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்திற்கு சிறந்த இயக்குனருக்கான பிலிம் பேர் விருது கிடைத்தது. இதனை தொடர்ந்து இயக்குனர் சுசீந்திரன், நான் மகான் அல்ல, அழகர்சாமியின் குதிரை, ராஜபாட்டை, ஆதலால் காதல் செய்வீர், பாண்டிய நாடு, ஜீவா போன்ற படங்களை இயக்கியுள்ளார். 

கடந்த நவம்பர் 10-இல் இவருடைய இயக்கத்தில் 'நெஞ்சில் துணிவிருந்தால்' படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பையும் பெரும்பான்மையான வாழ்த்துக்களையும் பெற்றது.  இதனை அடுத்து இவருடைய அடுத்த படத்திற்கான அறிவிப்பை தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார். இவருடைய அடுத்த படத்திற்கு 'ஏஞ்சலினா இது காதல் கதை அல்ல' தலைப்பு வைத்துள்ளார். இந்த படத்தில் புதுமுகங்களை நடிக்க வைப்பதாக தெரிவித்துள்ளார். இந்த படத்திற்கு 'விக்ரம் வேதா' புகழ் சாம் சிஎஸ் இசையமைக்க உள்ளார். இந்த படத்தை ஸ்ரீ சாய் சிரஞ்சீவி பிலிம்ஸ் மற்றும் ஆறாம் தினை பிலிம்ஸ் இணைந்து தயாரிக்க உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கி உள்ளார்.

 


இயக்குனர் சுசீந்திரனின் அடுத்த பட தகவல்


செய்தியாளர் பற்றி

அடிப்படையில் தேவி ஒரு ஓவியர் மற்றும் பயணங்களை மிகவும் ரசிப்பவர். இயற்கையின் மீதும் தனது எழுத்து திறமையின் மீதும் சிறந்த ஆர்வம் கொண்டவர். இவர் இயற்கை வளங்களையும், மலை சார்ந்த இடங்களையும் நிறையவே நேசிக்கிறார். இவர் தான் சேகரித்த பல்வேறு தகவல்களையும், எண்ணங்களையும் மக்களுக்கு கொண்டு சேர்ப்பவர். ... மேலும் படிக்க

Yasodha senior editor and writer

யசோதாமூத்த எழுத்தாளர்