நேக்கு கல்யாண வயசு வந்துடுத்து விக்னேஷ் சிவன்

       பதிவு : May 17, 2018 16:21 IST    
தற்போது சிவகார்த்திகேயன் பாடல் வரிகளில் அனிருத் இசையமைப்பில் கோலமாவு கோகிலா படத்தின் கல்யாண வயசு பாடல் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. இந்நிலையில் விக்னேஷ் சிவன் கல்யாண வயசு குறித்து கருத்து பதிவிட்டுள்ளார். தற்போது சிவகார்த்திகேயன் பாடல் வரிகளில் அனிருத் இசையமைப்பில் கோலமாவு கோகிலா படத்தின் கல்யாண வயசு பாடல் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. இந்நிலையில் விக்னேஷ் சிவன் கல்யாண வயசு குறித்து கருத்து பதிவிட்டுள்ளார்.

நடிகை நயன்தாரா நடிப்பில் விஸ்வாசம், இமைக்கா நொடிகள், கொலையுதிர் காலம், கோலமாவு கோகிலா போன்ற பல படங்கள் உருவாகி வருகிறது. இதில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் 'கோலமாவு கோகிலா' என்ற படத்தை லைக்கா ப்ரொடக்சன் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைப்பில் நடிகர் மற்றும் தயாரிப்பாளரான சிவகார்த்திகேயன் 'கல்யாண வயசு' என்ற பாடல் வரிகளை எழுதியுள்ளார்.

தற்போது இந்த பாடல் விடீயோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் யோகி பாபு, நயன்தாராவிடம் காதலை சொல்லும் காட்சி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. மேலும் வெளியான சில மணிநேரங்களில் இந்த பாடல் ரசிகர்களை கவர்ந்து 2 லட்சம் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. இந்த படத்திற்கு கோலமாவு கோகிலா என்று தலைப்பு வைத்துவிட்டு போதை பொருள் விற்கும் பெண் கதாபத்திரத்தில் நயன்தாராவை நடிக்க வைத்துள்ளார் இயக்குனர்.

 

இந்நிலையில் இயக்குனர் மற்றும் நயன்தராவின் காதலரான விக்னேஷ் சிவன் 'நேக்கு கல்யாண வயசு தான் வந்துடுச்சு டே' என்று சமூக வலைத்தளங்களால் இன்ஸ்டாங்க்ராம் மற்றும் டிவிட்டரில் பதிவு செய்து இருவரும் இணைந்துள்ள புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை கண்டு ரசிகர்கள் கல்யாண வயசு வந்துடுச்சுனா எப்ப கல்யாணம் என்று கேள்வி கேட்டு வருகின்றனர்.


நேக்கு கல்யாண வயசு வந்துடுத்து விக்னேஷ் சிவன்


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்