ads

முதன்முறையாக கமல் ஹாசனுடன் இணைந்துள்ள துல்கர் சல்மான்

முதன்முறையாக கமல் ஹாசனுடன் இணைந்துள்ள துல்கர் சல்மான்

முதன்முறையாக கமல் ஹாசனுடன் இணைந்துள்ள துல்கர் சல்மான்

மலையாள சினிமாவில் முன்னணி நடிகரான துல்கர் சல்மானுக்கு தமிழ் ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பு இருப்பதால் அவ்வப்போது தமிழ் படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். தமிழில் இவருடைய நடிப்பில் இறுதியாக சோலோ, நடிகையர் திலகம் போன்ற படங்கள் வெளியானது. இதன் பிறகு இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' என்ற படத்திலும் ஆர்ஏ கார்த்திக் இயக்கத்தில் 'வான்' என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் அடுத்ததாக நடிகர் மற்றும் அரசியல்வாதியான கமல் ஹாசனுடன் இணைந்து 'இந்தியன் 2' வில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரமாண்ட இயக்குனரான சங்கர் இயக்கத்தில் உருவாகவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது.

இந்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகின்றது. இந்த படத்தில் கமல் ஹாசனுக்கு ஜோடியாக நயன்தாராவும் மற்றொரு நாயகியாக காஜல் அகர்வாலும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இந்த படத்தில் துல்கர் சல்மான் முதன் முறையாக நடிகர் கமலுடன் இணைந்து நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

முதன்முறையாக கமல் ஹாசனுடன் இணைந்துள்ள துல்கர் சல்மான்