ads

வேதாளம் விவேகம் படத்தினை தொடர்ந்து விஸ்வாசத்தில் இணைந்த பிரபலம்

editor ruben joins ajith 58

editor ruben joins ajith 58

தல அஜித் தமிழ் திரையுலகில் 'அமராவதி' படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். அதன் பின்னர் ஆசை, வான்மதி, காதல் கோட்டை, காதல் மன்னன், அவள் வருவாளா, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் போன்ற பல வெற்றி படங்களை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து அஜித் 'வாலி' படத்தின் மூலம் இரு வேடத்தில் முதல் முறையாக நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றதோடு இப்படத்தின் மூலம் சிறந்த தமிழ் நடிகருக்கான பிலிம்பேர் விருதினையும் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கு அடுத்தபடியாக இவர் நடிப்பில் வெளிவந்த பூவெல்லாம் உன் வாசம், பில்லா, மங்காத்தா போன்ற படங்களுக்கு சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது பரிந்துரைக்கப்பட்டது.  

இந்த வெற்றி படங்களை தொடந்து தல அஜித் தனது 54வது படமான 'வீரம்' படத்தினை சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாக்கினார். இந்த படத்தினை தொடந்து மீண்டும் வேதாளம், விவேகம் படத்தின் மூலம் கூட்டணி தொடர்ந்தது. தற்பொழுது தல அஜித்தின் 58வது படமான விசுவாசம் படத்தினையும் இக்கூட்டணியில் உருவாக்கவுள்ளனர். தற்பொழுது இப்படத்தின் ப்ரீ - ப்ரொடெக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பை வருகிற 22ம் தேதியில் துவங்கவிருப்பதாக படக்குழு தகவலை கடந்த நாட்களில் வெளியிட்டது. படத்தின் டைட்டில் மற்றும் படப்பிடிப்பு துவங்கவிருக்கும் தேதியை மட்டும் வெளியிட படக்குழு மற்ற தொழில் நுட்ப கலைஞர்கள், நடிகர் - நடிகைகள் பற்றிய எந்த வித தகவலையும் வெளியிடாமல் படத்தின் சர்ப்ரைஸை அதிகப்படுத்தி வருகிறது. இந்நிலையில் எடிட்டராக தல அஜித்தின் வேதாளம், விவேகம் படத்தில் பணியாற்றிய ரூபன் இப்படத்திலும் இணைந்துள்ளாராம். இந்த தகவலை எடிட்டர் ரூபன் அவரது ட்விட்டர் பதிவு செய்து வெளியிட்டுள்ளார். 

வேதாளம் விவேகம் படத்தினை தொடர்ந்து விஸ்வாசத்தில் இணைந்த பிரபலம்