ads

ஜெயிக்கிற குதிர பட விவகாரம் இயக்குனர் மீது பைனான்சியர் புகார்

இயக்குனர் சக்தி சிதம்பரம் மீது பண மோசடி சம்பந்தமாக புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் சக்தி சிதம்பரம் மீது பண மோசடி சம்பந்தமாக புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் சக்தி சிதம்பரம், நடிகர் சத்யராஜ் நடிப்பில் வெளியான கோவை பிரதர்ஸ், மகா நடிகன், இங்கிலீஸ்காரன் போன்ற படங்களை இயக்கியுள்ளார். மேலும் சார்லி சாப்ளின், வியாபாரி, ராஜாதி ராஜா, குறு சிஷ்யன், சண்ட போன்ற படங்களையும் இவர் இயக்கியுள்ளார். இவர் தற்போது நடிகர் பிரபு மற்றும் பிரபு தேவா நடிப்பில் 2002-இல் வெளியான 'சார்லி சாப்ளின்' படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் ப்ரொடக்சன் பணிகள் நடந்து வருகிறது. இந்த படத்திற்கு முன்பு இவர் 'ஜெயிக்கிற குதிர' என்ற படத்தை இயக்கி உள்ளார். இதற்காக பைனான்சியர் பியாரிலால் குந்தச்சா என்பவரிடம் கடன் வாங்கி மோசடி செய்துள்ளதாக பியாரிலால் குந்தச்சா மத்திய குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அந்த புகார் மனுவில் "முதலில் ஜெயிக்கிற குதிர படத்தை நான் தான் தயாரித்து வந்தேன். இந்த படத்திற்காக 47 லட்சம் செலவு செய்தேன். இதன் பிறகு சக்தி சிதம்பரம் தயாரிப்பு உரிமையை அவரே பெற்று 10 லட்சம் மட்டும் தந்தார். மீதி பணத்தை பின்னர் தருவதாக கூறினார். ஆனால் எனக்கு தரவேண்டிய பணத்தை தற்போது வரை ஏமாற்றி வருகிறார். பணத்தை திருப்பி கேட்டால் குடும்பத்துடன் ராஜஸ்தானுக்கு ஓடி விடு என்று மிரட்டுகிறார்." என்று அவர் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து தற்போது போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதன் பிறகு இயக்குனர் சக்தி சிதம்பரத்தை காவல் துறையினர் விசாரணைக்காக அழைத்து சென்றனர். இந்த பிரச்சனையை தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷாலிடம் கொண்டு சென்றனர். தற்போது இந்த பிரச்சனை தொடர்பாக தயாரிப்பாளர் சங்கம் விசாரித்து வருகிறது 

ஜெயிக்கிற குதிர பட விவகாரம் இயக்குனர் மீது பைனான்சியர் புகார்