இறுதிக்கட்டத்தை எட்டிய பிரபு தேவாவின் சார்லி சாப்ளின் 2

       பதிவு : Feb 15, 2018 14:44 IST    
charlie chaplin 2 movie final shooting ongoing, image credit - twitter charlie chaplin 2 movie final shooting ongoing, image credit - twitter

நடிகர் பிரபு மற்றும் பிரபு தேவா நடிப்பில் கடந்த 2002-ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற ‘சார்லி சாப்ளின்’ படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. இந்த படத்தில் பிரபுதேவா, பிரபு, நிக்கி கல்ராணி, அடா சர்மா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இவர்களுடன் ரவிமரியா, செந்தில், ஆகாஷ், மகதீரா வில்லன் தேவ்கில், மும்பை வில்லன் சமீர் கோச், கோமல் சர்மா, அமீத், விவேக் பிரசன்னா, சாம்ஸ், சாந்தா, காவ்யா உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். மேலும் நடிகர் வைபவ் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.  

 

இந்த படத்தை முதல் பாகத்தை இயக்கிய இயக்குனர் சக்தி சிதம்பரம் இயக்குகிறார். இவருடைய இயக்கத்தில் வெளிவந்த கோவை பிரதர்ஸ், வியாபாரி, சண்டை, குரு சிஷ்யன் போன்ற படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவருடைய இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படம் காதல் கலந்த காமெடி படமாக உருவாகி வருகிறது.

இந்த படம் குறித்து இயக்குனர் சக்தி சிதம்பரம் கூறும்போது, " இந்த படம் முழுக்க கமர்ஷியல் காமெடி படமாக ரசிகர்களுக்கு உருவாகி வருகிறது. இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் கும்பகோணத்தில் நடைபெற்றது.

 

இந்த படப்பிடிப்பில் பிரபுதேவா மற்றும் 'மாவீரன்' படத்தின் வில்லன் தேவ் கில் இருவரும் மோதும் சண்டைக் காட்சி படமாக்கப்பட்டது. மேலும் பிரபுதேவா மற்றும் சமீர் கோச் இருவரும் மோதும் சூட்கேஸ் சண்டைக் காட்சியும் அங்கேயே எடுக்கப்பட்டது" என்று தெரிவித்துள்ளார்.

இசையமைப்பாளர் அம்ரிஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு பணிகளை செளந்தர்ராஜன் மேற்கொள்கிறார். மேலும் இந்த படத்திற்கு நடிகர் மற்றும் எழுத்தாளரான கிரேசி மோகன் இந்த படத்திற்கு திரைக்கதை அமைத்துள்ளார்.

 

charlie chaplin 2 movie shooting stills, image credit - twittercharlie chaplin 2 movie shooting stills, image credit - twitter

இறுதிக்கட்டத்தை எட்டிய பிரபு தேவாவின் சார்லி சாப்ளின் 2


செய்தியாளர் பற்றி

சிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க

Velu

வேலுசாமிசெய்தியாளர்