ads

பிரபு தேவாவின் லக்‌ஷ்மி பட புது தகவல்

prabhu deva lakshmi shooting wrap up

prabhu deva lakshmi shooting wrap up

கடந்த ஆண்டு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் பிரபு தேவா நடிப்பில் வெளிவந்த 'தேவி' படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. இந்த வெற்றி படத்தினை தொடந்து மீண்டும் இக்கூட்டணியில் நடனத்தை மையமாக கொண்டு ஒரு புதுவித படமான 'லக்‌ஷ்மி' படத்தினை இயக்கி வருகின்றனர். இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு மும்பை நகரத்தில் துவங்கி இருப்பதாக தகவலை கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளிவந்தது. விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்நிலையில் படத்தின் அனைத்து வித காட்சிகளையும் படமாக்கப்பட்டு விட்டதாக படக்குழு அதிகார பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.   

பிரதீக் சக்கரவர்த்தி மற்றும் ஸ்ருதி நல்லப்பா தயாரித்து வரும் இப்படத்தில் நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்துள்ளார். மேலும் இவர் முதல் முறையாக இப்படத்தின் மூலம் பிரபு தேவாவிடம் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. முடிவடைந்த இப்படத்தின் படப்பிடிப்பில் இறுதி நாளான அன்று நடிகர் பிரபு தேவாவை கௌரவிக்கும் விதமாக படக்குழு ஒரு அழகான ஓவியத்தை பரிசளித்துள்ளது. மேலும் பரிசளிக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் படக்குழு வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளது.  சாம்.சி.எஸ். இசையமைத்து வரும் இப்படத்தில் நிரவ்ஷா ஒளிப்பதிவு பணியை மேற்கொண்டுள்ளார். படத்தின் படப்பிடிப்பை முடிவடைந்து போஸ்ட் ப்ரொடெக்சன் பணியில் ஈடுபட்டு வரும் படக்குழு விரைவில் ரிலீஸ் தேதியை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.     

                  

பிரபு தேவாவின் லக்‌ஷ்மி பட புது தகவல்