ads
பிரபு தேவாவின் ஹாரர் படத்திற்கு சிறப்பு பூஜை
ராசு (Author) Published Date : Jan 01, 2018 17:36 ISTபொழுதுபோக்கு
நடிகர் பிரபு தேவா நடிப்பில் 'யங் மங் சங்', 'குலேபகாவலி', 'மெர்குரி', 'சார்லி சாப்ளின்-2', தெலுங்கில் 'காமோஷி' போன்ற படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளது. இதில் இயக்குனர் கல்யாண் இயக்கத்தில் பிரபு தேவா தற்போது நடித்து வரும் 'குலேபகாவலி' படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்பொழுது போஸ்ட் ப்ரொடெக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இப்படத்தின் இசை சில நாட்களுக்கு முன்பு வெளிவந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வருவதோடு படத்தின் எதிர்பார்ப்பையும் அதிகரித்திருந்தது.
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளிவந்த 'தேவி' என்ற ஹாரர் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்ததை தொடர்ந்து இரண்டாவது முறையாக புதுமுக இயக்குனர் ஆகாஷ் சாம் இயக்கத்தில் ஹில் ஸ்டேஷன் பின்னணியில் உருவாகியுள்ள புதுவித ஹாரர் படத்தில் நடிக்கவுள்ளார். இந்நிலையில் படத்திற்கு சிறப்பு பூஜை நேற்று நடைபெற்றதினை தொடர்ந்து முதல் கட்ட படப்பிடிப்பு மைசூர் பகுதியில் தொடர்ந்து 20நாட்கள் நடைபெற இருக்கிறது. படத்தின் பூஜை நடைபெறும் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை இணையத்தில் படக்குழு வெளியிட்டுள்ளது.
இந்த படத்தின் முக்கிய வேடத்தில் 'அறம்' புகழ் ராம் இணைந்துள்ளர். மேலும் இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பில் பிரபு தேவா மற்றும் ராம் சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுக்கப்பட்டு வரும் இந்நிலையில் படத்தின் மற்ற நடிகர் - நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்கள் மற்றும் தலைப்பு குறித்த தகவல் விரையில் வெளியிட உள்ளனர்.
prabhu deva new movie poojai
prabhu deva new movie poojai
prabhu deva new movie poojai
prabhu deva new movie poojai