ads

கவுதம் கார்த்திக் படத்தில் மூன்று நாயகிகள்

கவுதம் கார்த்திக் படத்தில் மூன்று நாயகிகள்

கவுதம் கார்த்திக் படத்தில் மூன்று நாயகிகள்

வளர்ந்து வரும் நாயகனின் ஒருவரான கவுதம் கார்த்திக் பல ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். இந்நிலையில் சந்தோஷ் ஜெயக்குமார் இயக்கத்தில் எஸ் தங்கராஜ் தயாரித்து சில நாட்களுக்கு முன்பு வெளிவந்த 'ஹர ஹர மகாதேவகி' அடல்ட் காமெடி திரைப்படம் அதிகளவு வரவேற்பினை பெற்றிருந்தது.  

இதனை தொடர்ந்து இந்திரஜித் படம் வெளிவரயுள்ளது. ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன், Mr சந்திரமௌலி போன்ற படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். மேலும் இரண்டாவது முறையாக சந்தோஷ் ஜெயக்குமார் இயக்கவிருக்கும் 'இருட்டு அறையில் முரட்டு குத்து' அடல்ட் காமெடி படத்தில் நடிக்க இருக்கிறார்.    

இந்த படத்தில் கார்த்திக் ஜோடியாக ஓவியா நடிக்கவிருப்பதாக தகவல்கள் வந்து கொண்டு இருக்கும் நிலையில் நிக்கி கல்ராணியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று இருந்தது. இவர்கள் இருவரும் நடிப்பதற்கு கால்ஷீட் கொடுக்கவில்லை.

இந்நிலையில் சந்தானம் நடித்த சக்க போடு போடு ராஜா, சர்வர் சுந்தரம் போன்ற படங்களில் நாயகியாக நடித்த வைபவி சாண்டில்யா நடிக்க இருக்கிறார். இதனை தொடர்ந்து யாஷிகா ஆனந்த், சந்த்ரிகா ரவி என இரு நாயகிகள் கமிட்டாகி உள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்க இருக்கிறது. 

கவுதம் கார்த்திக் படத்தில் மூன்று நாயகிகள்