ads

கஜினிகாந்த் பார் சாங் லிரிக்கல் வீடியோ

ghajinikanth movie bar song lyrical video release

ghajinikanth movie bar song lyrical video release

இயக்குனர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் வெளிவந்த 'ஹர ஹர மஹாதேவகி' காமெடி படத்திற்கு நல்ல வரவேற்பு இளைஞர்கள் மத்தியில் கிடைத்திருந்தது. இந்த படத்தினை தொடர்ந்து 'இருட்டு அறையில் முரட்டு குத்து' என்ற மற்றொரு படத்தினை இயக்கி வருகிறார். இதனை தொடர்ந்து நடிகர் ஆர்யா நடிப்பில் 'கஜினிகாந்த்' என்ற படத்தினை இயக்கிவருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ஆர்யா பிறந்த நாளை முன்னிட்டு சில நாட்களுக்கு முன்பு நடிகர் சூர்யா வெளியிட்டிருந்தார். 'ஸ்டுடியோ கிரீன்' தயாரிப்பு நிறுவனம் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரித்து வரும் இப்படத்தில் ஆர்யாவிற்கு ஜோடியாக சாயிஷா சைகல் இணைந்துள்ளார். இவர் தற்பொழுது நடிகர் விஜய் சேதுபதியுடன் இணைந்து 'ஜூங்கா' படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் 'கஜினிகாந்த்' படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டது.

இந்த படத்தின் டீசருக்கு சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனை தொடர்ந்து தற்போது இந்த படத்தில் இடம்பெறும் பார் பாடல் வெளியீட்டு நிகழ்ச்சி நேற்று ஸ்டுடியோ க்ரீன் சார்பில் நடைபெற்றது. இந்த விழாவில் ஆர்யா, சாயிஷா உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் பார் சாங் லிரிக்கல் வீடியோ ஒன்றை சமூக வலைத்தளங்களில் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

கஜினிகாந்த் பார் சாங் லிரிக்கல் வீடியோ